உடனே ஸ்டார்ட் பண்ணுங்க.. 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமா? தமிழக அரசுக்கு பறந்த கடிதம்: ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வலுத்துள்ளது. 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. போக்குவரத்து துறை மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளிலும் ஓய்வுபெற்றவர்கள் கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில், இதில் நிதிச்சுமையை கணக்கிட்டு தான், கோரிக்கையை நிறைவேற்ற முடிவு எடுக்கும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

Tamil Nadu Transport Department and Letter to TN Government about TN transport staff wage agreement

பேச்சுவார்த்தை: எனினும் இன்று 19-ந் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

இதனிடையே, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.வி.பத்மநாபன் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திடீர் கடிதம்: "போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஒப்பந்தம் கையெழுத்தானபோது, ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வரு கிறது. எனவே, 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

கடந்த 5-ம் தேதி நடந்தபேச்சுவார்த்தையில் நிதித்துறைஒப்புதலுடன் அறிவிப்பதாக அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின்படி, ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு, போக்குவரத்து கழகங்களின் வரவு - செலவுக்கான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

ஓய்வூதியம்: தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் முன்பு நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், அரசின் முடிவுதான் நியாயமான தீர்வை ஏற்படுத்தும்" என்று அதில் கூறப்பட் டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+