ஊருக்கு கிளம்பியாச்சா? மெல்லவும் முடியல, விழுங்கவும் முடியல.. தொடர் விடுமுறையா? கடுப்பேத்தாதீங்க பாஸ்
சென்னை: காதலன் படத்தில், "பண்டிகை தேதி SUNDAY-வில் வந்தால், டேக் இட் ஈஸி பார்மஸி" என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதினாரே.. அதைவிட பரிதாபமான நிலைமை ஒன்று நம்முடைய தமிழக ஊழியர்களுக்கு வந்துள்ளது.
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
விடுமுறை நாட்கள்: இதுபோன்ற சமயங்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகமும், தெற்கு ரயில்வேயும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றன.. ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும், சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகின்றன.. அந்த வகையில், இந்த முறையும் ஸ்பெஷல் அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த வார இறுதி நாளான 2ம் சனிக்கிழமை வருகிற 12ம் தேதி அதாவது நாளைய தினம் வருகிறது.. மறுநாள் ஞாயிற்றுக் கிழமையை 13ம் தேதி வருகிறது.. இந்த 2 நாட்களுமே விடுமுறை நாளாகும்.. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி முடிவு செய்துள்ளனர்... ஆடி மாதம் என்பதால், நிறைய பேர், கோயில் திருவிழாக்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பெருத்த சோகம்: இதில் பெருத்த சோகம் என்னவென்றால், தொடர்ந்து 4 நாட்கள் என்றில்லாமல், 12, 13, 15 என்று விடுமுறை வந்துள்ளது.. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக இல்லாமல் போய்விட்டதே என்று அரசுத் துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நொந்து கொள்கிறார்கள்..
2 நாள் விடுமுறை என்றாலும், 14ம் தேதி பணிநாள் என்பதால், அன்றைய தினம் எல்லாரும் டியூட்டிக்கு வந்தாக வேண்டிய நிலைமை உள்ளது. அப்படியே கிளம்பி வந்தாலும், மறுநாள் 15ம் தேதி லீவு என்பதால், மறுபடியும் ஊருக்கு போக முடியாத நிலைமை உள்ளது. இதனால், 3 நாள் லீவு வந்தாலும்கூட, அதை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியலையே என்ற தவிப்பில் உள்ளார்கள் பொதுமக்கள்..
தொடர் விடுமுறையா: வேண்டுமானால், 14ம் தேதியும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஒருநாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைக்கலாம். இப்படி ஊழியர்கள் ஆசைப்பட்டாலும், அதற்கு நிறுவனங்கள் அனுமதிக்குமா? என்று தெரியவில்லை... எப்படிப்பார்த்தாலும், 3 நாள் லீவு என்றாலும், அதை "தொடர் விடுமுறை" என்றுகூட சொல்ல முடியாத சோகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.!!!












Click it and Unblock the Notifications