பேயாட்டம் ஆடப் போகுது மழை.. தமிழ்நாடே ஊட்டியாகப் போகுது! மொத்தம் இத்தனை மாவட்டங்களில் மழையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டங்களில் லேசான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கமே கடும் வறட்சியாக அமைந்த நிலையில் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெயில் கொளுத்தியது. மே மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. ஆனால் ஜூன் ஜூலை மாதங்களில் வெயில் மீண்டும் அதிகரித்தது.

இந்த நிலையில் கோடைக்காலம் முடிவடைந்து தற்போது குளிர்காலம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

Tamil Nadu Weather Alert

தமிழ்நாடு வானிலை

இந்த நிலையில் தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இன்றும் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று காலை 10 மணி வரை 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மழை முன்னறிவிப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடரும்

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+