"அதிசயம்".. வங்கக்கடலில் 3 மீட்டர் உயரத்தில் நடப்பது என்ன? தமிழ்நாட்டை புயல் தாக்குமா? பரபர டேட்டா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வரும் நிலையில், புயல் தாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் பலரிடையே புயல் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இரண்டு நாட்களாக லேசாக பெய்து வந்த மழை நேற்றும் இன்றும் தீவிரம் அடைந்தது.
வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே பொதுவாக இவ்வளவு மழையை கொடுக்காது. ஆனால் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே 100 மிமீ அளவிற்கு பல ஏரியாக்களில் மழை பெய்து உள்ளது.

3 மீட்டர் உயரம்
இப்படி வடகிழக்கு பருவமழை ஏற்படுவதற்கு பொதுவாக ஒரு காரணம் தேவைப்படும். அதாவது பருவமழை சரியாக பெய்வதற்கு காற்றழுத்த தாழ்வு நிலையோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ தேவைப்படும். அதன்படியே தற்போது வட இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவி வருகிறது. இதன் கரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்து வருகிறது.

சென்னையில் குறையும்
இதைதான் வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. கடல் பரப்பில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் இந்த சுழற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இங்கு நடக்கும் இயற்கை அதிசயம்தான் தமிழ்நாட்டிற்கு மழையை கொண்டு இருக்கிறது. தற்போது இதன் காரணமாக சென்னைக்கு அருகே மழை மேகங்கள் இருந்தன. இந்த மேகங்கள் மற்றும் காற்று தற்போது குமரியை நோக்கி நேராக சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இன்றில் இருந்து சென்னையில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
Images credit : Windy

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும்
நாளையில் இருந்து தென் மாவட்டங்களில் மழை பெய்யும். மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Images credit : Windy

அதிகாலை
முக்கியமாக அதிகாலை நேரங்களில் மழை பெய்யும். அதிகாலையில் நிலக்காற்றும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஏற்கனவே இருக்கும் வடகிழக்கு காற்று வீரியம் பெறும். இதனால் மழை அதிக அளவில் வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் அதிகாலையில் பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வரும் நிலையில், புயல் தாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் பலரிடையே புயல் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன

கடல் வெப்பநிலை 26 டிகிரி
பொதுவாக புயல் ஏற்பட வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும். தற்போது அங்கு வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. ஆனாலும் இவை நடுக்கடலில் இல்லாமல்.. இலங்கை மண்ணுக்கு மிக அருகில் உள்ளது. உயரமும் குறைவாக உளது.

ஆனால் வாய்ப்பு இல்லை
இதனால் புயல் உருவாக போதிய சூழ்நிலை இல்லை. கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாகவே சென்னை வானிலை மையம் புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லை. எனவே இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு புயல் பாதிக்கும் அபாயம் இல்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications