வண்டலூரில் ஆரம்பிச்சாச்சு.. குன்றத்தூர் டூ தாம்பரம்.. பெரிய மழை வருது.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: வண்டலூரில் பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில், வெதர்மேன் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது, சென்னைவாசிகளை குஷியில் ஆழ்த்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அனல் அடித்து கொண்டிருக்கிறது.. கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி எடுத்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்..
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெயிலால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர்.

அனல் காற்று: அனல் காற்றும் வீசிவருவதால், வாகன ஓட்டிகளும் மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.. ஆனால், சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்கள், இதனால், பெரும் பாதிக்கு ஆளாகி உள்ளனர்.. எந்நேரமும் அனல் அடித்தபடியே உள்ளதால், இரவு நேரங்களிலும் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது.
எனினும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.. நேற்றுகூட கோவை, நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை கொட்டியது.. இந்த கோடை மழையினால், சில மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றுடன் நாடு முழுவதும் நிலவி வரும் வெப்ப அலை நிறைவு பெறுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.. இதனால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு நிறையவே இருப்பதாகவும் கூறியிருந்தது.. அதற்கேற்றபடி, நேற்றைய தினம், சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
வெப்ப சலனம்: அதில், வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல், வரும் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில், வெதர்மேனும் ஒரு ஜிலீர் செய்தியை சொல்லி உள்ளார்.. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் மழை: இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "வட தமிழகத்தில் கடுமையான வெயிலுக்கு பிறகு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மேற்கு சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர் - தாம்பரம் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வெதர்மேன் சொன்ன இந்த தகவலால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... இப்படிப்பட்ட சூழலில், சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் மாலை முதல் நல்ல மழை பெய்து கொண்டிருப்பது, சென்னையை மேலும் குதூகலமாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications