Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - அமைச்சர் தங்கம் தென்னரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும், விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது என்பது முதல்வரின் திடமான கொள்கை என்றும், எதிர்காலத்திலும் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி தராது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த நிலையில் அதற்கான சூழலியல் அனுமதியை மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கிறது.

tamil-nadu-will-never-allow-hydrocarbon-project-minister-thangam-thennarasu

சீமான், அன்புமணி எதிர்ப்பு

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி சீமான், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவிட்தனர். இராமநாதபுரம் மாவட்டம், அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தினை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது என்று சீமான் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கி தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழக அரசு வழங்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது:-

ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்

தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone - PAZ) சட்டம், 2020-ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது. இந்த சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2023-ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையில், ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Ltd.) நிறுவனமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority - SEIAA) ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

எதிர்காலத்திலும் அனுமதிக்காது

இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதவர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும்.

எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்தஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்ட வட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+