மேகதாது: இபிஎஸ் தீர்மானம்.. ஒரு செங்கல்லை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது.. துரைமுருகன் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலைப் பெறாமல் ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகா அரசு எடுத்து வைக்கவே முடியாது என தமிழ்நாடு சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இறுதி நாளான இன்று காவிரி விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, மேகதாது அணை கட்டுவது தொடர்பான பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவிலை என குற்றம் சாட்டினார்.

Tamil Nadu Wont allow construction of Mekedatu Damy by Karnataka, says Durai Murugan

இதனைத் தொடந்து இந்த தீர்மானத்தின் மீது பேசிய பல்வேறு கட்சித் தலைவர்களும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட அனுமதிக்கவே கூடாது என வலியுறுத்தினர்.

இந்த விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்கவே கூடாது என தமிழ்நாடு , கேரளா மற்றும் புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் நீர்வளத்துறையும் மேகதாது அணை தொடர்பாக மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது என வலியுறுத்தியது. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டுக்கானது மட்டுமே. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறித்தான் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது விவகாரத்தை விவாதிக்கிறது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமல் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா அரசால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு தொடர்ந்தும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றார். ஆனால் அமைச்சர் துரைமுருகனின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+