தி பேமிலி மேன் 2.. தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா? சர்ச்சையான டிரைலர்.. வலுக்கும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமேசான் பிரைமில் வெளியாக உள்ள தி பேமிலி மேன் 2 தொடர் தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

2019ல் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸ்தான் தி பேமிலி மேன். மனோஜ் பாஜ்பாயி, சந்தீப் கிஷன், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து, பெரிய அளவில் இந்த சீரிஸ் வைரலானது. ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர்.

கேரளாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதாக தொடங்கும் இந்த சீரிஸ், பாகிஸ்தான், மும்பை, ஜம்மு, கேரளா என்று பல இடங்களுக்கு செல்லும். மனோஜ் பாஜ்பாயி இதில் என்ஐஏ அதிகாரியாக நடித்து இருப்பார்.

என்ஐஏ

என்ஐஏ

ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக அதிரடி காட்டும் மனோஜ் பாஜ்பாயி இன்னொரு பக்கம் வீட்டில் குடும்பத்தை கவனிக்க முடியாமல் சண்டை போடுவதும், பிரியாமணி மீது சந்தேகம் அடைவதும் என ஒவ்வொரு கட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது. முதல் சீசனில் டெல்லியில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்தப்படுவது போல சஸ்பென்சுடன் இந்த தொடர் முடிக்கப்பட்டு இருக்கும்.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

இந்த தொடர் சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்ட நிலையில், இதன் இரண்டாவது சீசன் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது தி பேமிலி மேன் 2 ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தி பேமிலி மேன் 2 டிரைலர்தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தி பேமிலி மேன் 2 தொடரில் சமந்தா நடித்து உள்ளார்.

சிக்கல்

சிக்கல்

இதில் சமந்தா இலங்கையில் இருந்து வந்தவரை போல காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. சமந்தா இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக கட்டப்பட்டுள்ளது.

சமந்தா தமிழ்

அதோடு நான் எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று சமந்தா தமிழில் பேசுவதாகவும் காட்டி இருக்கிறார்கள். ராஜி என்ற பெயருடன் சமந்தாவை டிரைலரில் காட்டி உள்ளனர். அதோடு சமந்தாவை இலங்கையில் உள்ள போராளி குழுவை சேந்தவர் என்று கூறி, அவருக்கும் ஐஎஸ்எஸ் அமைப்புக்கும் கூட்டணி இருப்பதாகவும் காட்டி உள்ளனர்.

எதிர்ப்பு

சென்னையில் இவர்கள் தாக்குதல் நடத்த போவதாக தி பேமிலி மேன் தொடரின் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. இந்த தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போல காட்டுவதும், இலங்கையில் உள்ள போராளி குழுக்கள் என்று கூறி மறைமுகமாக விடுதலை புலிகள் அமைப்பை விமர்சனம் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. சமந்தாவின் உடை கூட எல்டிடிஇ அமைப்பை போல வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிவிட்டர்

டிவிட்டர்

இந்த தொடரின் முதல் சீசனில் மலையாளிகளை ஐஎஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது போல் சித்தரித்தது எதிர்ப்பை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது தமிழர்களை இதேபோல் தீவிரவாதிகளாக தி பேமிலி மேன் 2 சித்தரிக்கிறது என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. இணையத்தில் தமிழர்களை இது கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கு எதிராக #FamilyMan2_against_Tamils என்ற டேக் வைரலாகி வருகிறது.

கோபம்

பலரும் இந்த தொடரை வெளியிட கூடாது. உடனே இதை தடை செய்ய வேண்டும். தமிழர்களின் மனதை இது புண்படுத்துகிறது என்று பலரும் இணையத்தில் புகார் வைத்துள்ளனர். அதிலும் தமிழ் பெண் சமந்தா உள்ளிட்ட பல தமிழ் பிரபலங்கள் கதையில் வருவதும் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. சமந்தாவிற்கு எதிராக டிவிட்டரில் தற்போது பலர் டிவிட் செய்ய தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+