அதியமானும், அவ்வையாரும் கள் உண்டுள்ளார்கள்.. சீமான் சொல்லும் கதை!
சென்னை: சங்க இலக்கியங்களில் கள் மூலிகை சாறாக இருந்ததாகவும், அதியமானும் அவ்வையாரும் கள் உண்டு பேசி இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருக்கிறார். பனை ஏறுவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள சீமான், டாஸ்மாக் மதுபான குடித்துதான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதற்கான சீமான் பனை ஏறும் பயிற்சி எடுத்து வருவதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் சீமானின் கள் இறக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் கள் இறக்கும் போராட்டம் தொடர்பாக சீமான் பேசுகையில், முதல் கட்டமாக பெரியதாழையில் பனை ஏறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளேன். மீன் குஞ்சுக்கு கடலில் நீந்த சொல்லி கொடுக்க தேவையில்லை. எனக்கு பனை ஏறுவதற்கு நன்றாக தெரியும். ஆனால் கடந்த சில காலங்களாக பனை ஏறாததால், சிறிய பயிற்சி தேவை.
தமிழ்நாட்டில் 15 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி மரங்களாக குறைந்துள்ளன. அதனால்தான் பல கோடி பனை திட்டம் என்று உருவாக்கினோம். லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரமாக இருக்கின்றன. பனை மரத்தின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்த முடியும். பனையில் இருந்து மட்டும் 840 பொருட்கள் தயாரிக்கபட்டு வருகிறது.
அப்படியான சிறந்த மரத்தில் இருந்து கிடைக்கும் கள் குடித்து யாரும் இறந்ததில்லை. டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தும் கள்ளச்சாராய சாவுகள் அரங்கேறுகின்றன. அதேபோல் சங்க இலக்கியங்களில் கல், மூலிகை சாறாக போற்றப்படுகிறது. அதியமான், அவ்வையார் கள் உண்டு பேசி இருக்கின்றனர். பானையில் சுண்ணாம்பு தடவி வைத்தால் அது பதநீர். சுண்ணாம்பு தடவாமல் இறக்கினால் கள்.
அதை முடித்து விதவைகள் உருவாகவில்லை. மதுபானம் குடித்துதான் விதவைகள் உள்ளனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கள் இறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானம் சப்ளை செய்யும் தொழில் அதிபர்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கின்றனர். அவர்களுக்கு வருமானம் பாதிக்கும் என்பதால், தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications