இரவோடு இரவாக தற்கொலை செய்த நடிகை நந்தினி! "விவரிக்க முடியாத வேதனை.." உடன் நடித்த பிரபல நடிகை கண்ணீர்
சென்னை: பிரபலச் சின்னத்திரை நடிகை நந்தினி நேற்றிரவு திடீரெனத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதற்கிடையே நந்தினியின் மறைவிற்கு அவருடன் நடித்த நடிகை ஸ்வேதா சுப்ரமணியன் இரங்கல் தெரிவித்துள்ளார். நந்தினி உடன் சிரித்து மகிழ்ந்த நாட்களை மறக்கவே முடியாது என்று நடிகை ஸ்வேதா பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நந்தினி.. கன்னட சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், அங்குப் பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளார். பல தொடர்களில் துணை வேடங்களில் நடித்தார். இந்தச் சூழலில் தான் கலைஞர் டிவி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நந்தினி அறிமுகமானார். 'கௌரி' சீரியலில் துர்கா மற்றும் கனகா என இரு வேடங்களில் நடித்து வந்தார்.

நடிகை மரணம்
அவரது நடிப்பு காரணமாகக் குறுகிய காலத்தில் அவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தனர். இந்தச் சூழலில் தான் அவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு பெங்களூரில் உள்ள ஹோட்டல் அறையில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள்.
அதன்படி நந்தினியின் மறைவிற்கு அவருடன் நடித்த நடிகை ஸ்வேதா சுப்ரமணியன் இரங்கல் தெரிவித்துள்ளார். நந்தினிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், "நந்தினி... RIP சத்யாவின் துர்கா" என்று பதிவிட்டுள்ளார்.
வேதனை
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அழகிய ஆடை, நல்ல மேக்அப் உடன் கூடிய போட்டோக்களை வெளியிட வேண்டும் என்று நீ எப்போதும் என்னிடம் சொல்வாய்.. ஆனால், இந்த போட்டோக்களை பகிர எப்போதும் அனுமதித்ததே இல்லை. ஆனால் இப்போது, ஷூட்டிங் சமயத்தில் நாம் பேசிய அந்த எளிய வார்த்தைகள் ஒரு வலிமிக்க வேதனை நினைவாக மாறும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை.
ஜாலி ரீல்ஸ்
ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நாம் பெரும்பாலான நேரத்தைக் கழித்து இருந்தோம். ஷூட்டிங் சமயத்தில் சிரித்து மகிழ்ந்தோம்.. ரீல்ஸ் எடுக்கப் பயிற்சி செய்தோம்! மேக்கப் அறையில் சீக்ரெட்களை பகிர்ந்து கொண்டோம்.. அழகிய நினைவுகளை உருவாக்கினோம். சீரியலில் எங்களை சத்யா- துர்காவாகவே தெரியும்.. சீரியலுக்கு வெளியேயும் என் மீது உரிமை எடுத்துக் கொள்வாய்.. அது மிகவும் அழகாக இருந்தது. நான் உன்னை மிகவும் நேசித்தேன். நீ எப்போதும் எனது துர்காவாக என்றென்றும் நட்சத்திரமாக ஜொலிப்பாய்.
நினைவுகளை உருவாக்கினோம்
நீ இன்னும் சில காலம் இருந்திருக்கலாமே என நான் விரும்புகிறேன்.. நாங்கள் முயற்சி செய்தோம்.. நாம் இருவரும் நேசித்தோம்.. நினைவுகளை உருவாக்கினோம். ஆனால் நீ ஒரு கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தாய்! இந்த இழப்பு எங்கள் இதயங்களையும், எங்கள் பணியிடத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குச் சிதைத்துவிட்டது. நீ எங்களுடன் இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது.. அமைதியில் ஓய்வெடு! நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்வாய்.
தற்கொலை ஒரு தீர்வு அல்ல! தயவுசெய்து எதாவது பிரச்சினை என்றால் உதவி கேளுங்கள்.. பக்கத்தில் யாராவது இருந்தால் அவர்களுடன் பேசுங்கள்.. நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications