நீங்க நடிக்கவே போயிருங்கண்ணா.. ’சனிக்கிழமை’ சர்ச்சையால் விஜய்க்கு சிக்கல்! என்னா அடி அடிக்குறாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாரோ அதே அளவுக்கு விமர்சனத்தையும் பெற்று வருகிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். குறிப்பாக அவரது தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமைகளில் மட்டும் நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்பதிலிருந்து, வீக் என்ட் அரசியல்வாதி என்ற விமர்சனம் விஜய் மீது முன்வைக்கப்படுகிறது.

தமிழக அரசியலில் நடிகர்கள் நாடாள வருவது ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழகத்தை கடந்த சில தலைமுறைகளாக ஆண்டவர்கள் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு பல நடிகர்கள் நாடாள வந்தும் காணாமல் போனதுதான் வரலாறு. பாக்கியராஜ், சிவாஜிகணேசன், சரத்குமார், கார்த்திக் என பலர் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்தவர் விஜயகாந்த் மட்டும்தான்.

Tamilaga Vetri Kazhagam Vijay

தமிழக அரசியல்

அதற்கு முன்பும் பின்பும் அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் காணாமல் போனதுதான் வரலாறு. ஆனால் அதையெல்லாம் முறியடிக்கப் போகிறேன் என அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாகக் கூறி கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில், அரசியலுக்கு வருவது உறுதி என சொல்லாமல் சொல்லி அதனை செய்து காட்டியிருக்கிறார் விஜய். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் உதயமானது.

விஜய் அரசியல்

அதற்குப் பிறகு எந்த நிகழ்வுகளிலும் விஜய் தலை காட்டவே இல்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு வழக்கம் போல் எந்த நிகழ்ச்சியிலும் விஜய் தலை காட்டவில்லை. சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, தனியார் இதழ் நடத்திய புத்தக வெளியீட்டு விழா ஆகியவை மட்டும்தான் விஜய் முகம் காட்டிய நிகழ்வுகள். தொடர்ந்து அறிக்கையை விடுவது, பனையூருக்கு பயனாளிகளை வர வைப்பது என விஜய்யின் செயல்பாடுகள் கேள்விக்குறியானது. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனமும் விஜய் மீது முன்வைக்கப்பட்டது.

விஜய் பிரச்சாரம்

இது ஒரு புறம் இருக்க, 2026 தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக மதுரையில் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்திக் காட்டினார் விஜய். இதுவரை நடந்த மாநாடுகளிலேயே மிகப் பிரமாண்டமான மாநாடு என சொல்லப்பட்டாலும், விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு தொடங்கி சேர்கள் உடைக்கப்பட்டது வரை அனைத்து கேள்விகளும் விஜய்யை நோக்கி முன்வைக்கப்பட்டன.

விஜய் மீது விமர்சனம்

இந்நிலையில், மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார பயணத்தை தொடங்கப் போகிறார் விஜய் என்று அறிவிப்பும், திருச்சியில் அதற்கான முன்னேற்பாடுகளும் தமிழக அரசியல் கட்சிகளை கவனிக்க வைத்தது. இதற்கிடையே விஜய் பிரச்சாரம் செய்யப் போகிறார் என வெளிப்படையாக அறிவித்துள்ள தமிழக வெற்றி கழகம், விஜய்யின் பயணத்திட்டத்தையும் வெளியிட்டது. அதனால் மிகப் பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டு இருக்கிறார் விஜய்.

விஜய் பிரச்சார திட்டம்

திருச்சி முதல் மதுரை வரை விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், 13ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் விஜய் முதல் வாரத்தில் பிரச்சாரம் செய்கிறார். அதற்குப் பிறகு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையில் கடைசி வாரமாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பயணத்திட்டம் முழுவதும் சனிக்கிழமைகளில் நடப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சனிக்கிழமை விஜய்

அக்டோபர் ஐந்தாம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் மற்ற அனைத்து தேதிகளிலும் விஜய் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வார இறுதியில் அதிக கூட்டம் திரளும் வகையில் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார் என தமிழக வெற்றி கழகத்தினர் கூறினாலும், ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தாண்டி வீக் எண்ட் அரசியல்வாதி என்ற விமர்சனம் விஜய் மீது முன்வைக்கப்படுகிறது.

அரசியல் ட்ரோல்

இதனால் சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் விஜய். அரசியல் கட்சிகள் தொடங்கி விஜய் ரசிகர்கள் சிலரே அதனை விமர்சித்து வருவதையும் கவனிக்க வேண்டும். பேசாமல் நீங்கள் படம் நடிக்கவே போயிருங்கள் என பலர் குமுறுகின்றனர். இந்நிலையில் விஜயின் திட்டம் என்ன? எதற்காக அவர் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து தெரியாமல் புலம்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+