என்ன டிராமா பண்றீங்களா திருமாவளவன்? கச்சத் தீவு விவகாரத்தில் தமிழிசை காட்டம்!
Recommended Video
சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடகமாடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்தி திருமாவளவன் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினராகியுள்ளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்நிலையில் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பியான ரவிக்குமார் ஆகியோர் டெல்லி சென்றனர்.

வருத்தம்
இந்நிலையில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் மத்தியில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது வருத்தமளிப்பதாக கூறினார்.

ஸ்டெர்லைட்
மேலும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்யவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தார்.

தமிழிசை பதில்
அப்போது கச்சத்தீவு உரிமையை தமிழகத்திற்கு மீட்டுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் திருமாவளவன். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் கொடுத்துள்ளார்.
|
என்ன நாடகம்?
இதுதொடர்பாக டிவிட்டர் பதில் அளித்துள்ள அவர், கச்சதீவை இலங்கையிடம் தாரை வார்த்த திமுக- காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்த விசிக தலைவர் திருமாவளவன் கச்சதீவை மீட்போம் என கூறுவது என்ன நாடகம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தாரை வார்த்தார்கள்
மேலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி. அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும் கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்தார்கள். இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்து பதவி பெற்ற நீங்கள் கச்ச தீவை மீட்க வேண்டும் என இப்போது கூறுவது என்ன நாடகம்?

பதவி ஆசையில் மறந்துவிட்டதா?
கச்சத்தீவு, ஈழத்தமிழர்கள் பிரச்சனை எல்லாம் தேர்தல் முடிந்த பின்தான் ஞாபகத்திற்கு வருகிறதா? திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டு பதவி ஆசையில் மறந்துவிட்டதா? இவ்வாறு அறிக்கை வாயிலாகவும் தமிழிசை திருமாவளவனை சாடியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications