மடியில் கனம்.. அதான் உங்க கண்ணுக்கு காவலாளி.. களவாணியாக தெரிகிறார்.. ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்
முக ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: "உங்களுக்கு மடியில் கனம் இருக்கிறது.. அதனால்தான் காவலாளி, உங்க கண்ணுக்கு களவாணியாக தெரிகிறார்" என்று முக ஸ்டாலினை சரமாரி விமர்சித்துள்ளார் தமிழிசை சவுந்தராஜன்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிகப்பு நிற ஷர்ட் அணிந்து கலந்து கொண்டார். அதேபோல, எம்பி கனிமொழி சிகப்பு நிற சேலை அணிந்திருந்தார்.

இந்த பேரணியில் பேசிய ஸ்டாலின், "நாட்டின் காவலாளி என்று பிரதமர் சொல்லி கொள்கிறார். அவர் நாட்டின் காவலாளி இல்லை. நாட்டின் களவாணியாக விளங்கி கொண்டிருக்கிறார். ஆனால் திமுகதான் உண்மையான காவலாளியாக செயல்படுகிறது" என்றார்.

முக ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்போது அல்ல.. யார், எப்போது, நாட்டின் பிரதமரை தவறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசிவிட்டால், முதலில் வந்து கண்டனம் சொல்வது தமிழிசைதான்.
அதன்படியே இப்போதும் முதல் ஆளாக வந்து ஸ்டாலினை திட்டி ட்வீட் போட்டுள்ளார். ஒரு பிரதமரை எப்படி களவாணி என்று கூறலாம் என்று கேட்டுள்ளார்.
நாட்டின் பிரதமரை களவாணி என தரம்தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் ஆட்சிஅதிகாரத்தில்ஊழலையும்லஞ்சத்தையும் இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமட்டார்கள் மடியில்கணமிருப்பதால்தானே காவலாளி களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்?
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 1 May 2019
அதில், "நாட்டின் பிரதமரை களவாணி என தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் ஆட்சி அதிகாரத்தில் ஊழலையும் லஞ்சத்தையும் இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் மடியில் கணமிருப்பதால்தானே காவலாளி களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications