ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை
திமுக போராட்டம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் விமர்சித்துள்ளார்
சென்னை: "அரசியல் சட்டத்தை எரிக்கவில்லை! பேப்பரைத்தான் எரித்தோம்? இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.. திமுகவின் வழக்கமான பழைய டயலாக்? நினைவுக்கு வருதே.. ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போராடிய வீரர்கள்?" என்று திமுக தலைவர் ஸ்டாலினை கேள்வி கேட்டு, தமிழிசை சவுந்தராஜன் நக்கலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.. குரல் கொடுத்தன.. கண்டனம் தெரிவித்தன.. ஆனால் போராட்டம் என்று இறங்கியது திமுகதான். இதன் எதிர்ப்பை வெளிப்படுத்தவே டெல்லியில் போராட்டம் நடத்தியது.
ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போராடிய வீரர்கள் ?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 23, 2019
இந்நிலையில், நேற்று ஒரு திருமண விழாவில் பேசிய முக ஸ்டாலின் "காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும், கையாண்ட விதம்தான் தவறு என்றும், முறையாக இந்த சட்ட நீக்கம் அமல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவே போராடினோம்" என்று பேசியதாக செய்திகள் வெளிவந்தன. ஸ்டாலினின் இந்த பேச்சைதான் தமிழக பாஜக தலைவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
370பிரிவு ரத்தானதற்கு எதிராக டில்லியில் போராடவில்லை.அதை செயலாக்கியவிதம் சரியில்லை என்றே போராடினோம்..ஸ்டாலின்.. அரசியல் சட்டத்தை எரிக்க வில்லை!பேப்பரைத்தான் எரித்தோம்? இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்... திமுகவின் வழக்கமான பழைய டயலாக்?நினைவுக்குவருதே
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 23, 2019
"ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போராடிய வீரர்கள்? 370 பிரிவு ரத்தானதற்கு எதிராக டில்லியில் போராடவில்லை. அதை செயலாக்கிய விதம் சரியில்லை என்றே போராடினோம்..ஸ்டாலின்.. அரசியல் சட்டத்தை எரிக்கவில்லை! பேப்பரைத்தான் எரித்தோம்? இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்... திமுகவின் வழக்கமான பழைய டயலாக்? நினைவுக்கு வருதே" என்று கிண்டலடித்துள்ளார்.
எங்களுக்கு உங்களைப்பெத்தவரும் நீங்கள் பெத்தவரும் எதிர்ப்பது நினைவுக்கு வருது மேடம்
— Salahudeen உங்கள்மீது இறைவனின் அமைதி உண்டாகட்டும் (@salahudeentntj) August 24, 2019
வழக்கம்போல, தமிழிசையின் ட்வீட்டுக்கு வரவேற்று, எதிர்த்து என மாறி மாறி விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. அதில் "எங்களுக்கு உங்களைப்பெத்தவரும் நீங்கள் பெத்தவரும் எதிர்ப்பது நினைவுக்கு வருது மேடம்" என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட் போட்டு வருகின்றனர்
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications