சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது என்ன சார்.. எங்க கட்சியில் பாருங்க.. மோடியவே மோடி மோடின்னுதான் கூப்பிடறாங்க.. தமிழிசை அட்டாக்!

Google Oneindia Tamil News

சென்னை: " ஏதோ "சார்ன்னு என்னை கூப்பிடாதீங்கன்னு" ராகுல் சொல்றார். ஆனா எங்க கட்சியில சாதாரண தொண்டன் கூட மோடியை மோடி மோடி மோடின்னுதான் கூப்பிடறாங்க.

நேற்று ராகுல்காந்தி சென்னை வந்திருந்தபோது கல்லூரி பெண்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பெண்களிடம் ராகுல் பேசிய முதிர்ச்சியான பேச்சு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விதம், எல்லாமே வெகுவாக ரசித்து பார்க்கப்பட்டது. ராகுலின் ஸ்மார்ட் லுக் கூட எல்லோராலும் ரசிக்கப்பட்டது. இதை மற்ற மீடியாக்களும் வெளிப்படுத்தின.

ஆனால் பாஜக காதில் லைட்டாக புகை வர ஆரம்பித்துவிட்டது போலும். இன்றைக்கு ராகுலின் வருகை சம்பந்தமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து சொல்லி இருக்கிறார்.

ஒரேநாளில் வேலை செய்யாமல் போன பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. உலகம் முழுக்க டவுன்.. என்ன காரணம்?ஒரேநாளில் வேலை செய்யாமல் போன பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. உலகம் முழுக்க டவுன்.. என்ன காரணம்?

அரசியல்

அரசியல்

"ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் பேசியதை பற்றி நான் மறுப்பு சொல்லல. ஆனால் கல்லூரிகளை அரசியல் களமாக்க வேண்டுமா என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு சிந்தனை உண்டு. ஏன்னா.. படிக்கற இடத்துல நேர்மறை அரசியலைதான் தெரியப்படுத்த வேண்டுமே தவிர எதிர்மறை அரசியலை அவர்களிடம் பதிய வைக்க கூடாது.

தைரியம் இருக்கா?

தைரியம் இருக்கா?

3000 பெண்கள் மத்தியில் பேசுகின்ற தைரியம் மோடிக்கு இருக்கிறதா என்று கேட்கிறார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு போகும்போதெல்லாம் பாத்தீங்கன்னா.. அங்க லட்சக்கணக்கில் தமிழர்கள் கூடியிருக்கிறாங்க.. அவங்க முன்னாடிதான் பிரதமர் பேசியிருக்கிறார். அதேபோல, ஏதோ "சார்ன்னு என்னை கூப்பிடாதீங்கன்னு" அவர்தான் சொல்றார். ஆனா எங்க கட்சியில சாதாரண தொண்டன் கூட மோடியை மோடி மோடி மோடின்னுதான் கூப்பிடறாங்க.

என்ன பண்ணாங்க?

என்ன பண்ணாங்க?

33 சதவீதம் கொடுப்பேன்னு சொல்றாரே? இன்னைக்குதான் இனிமேதான் ஆட்சிக்கு இவங்க வர போறாங்களா? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷம் அவங்கதான் ஆட்சியில இருந்திருக்காங்க. அப்ப ஏன் 33 சதவீதத்தை கொடுக்கல? 33 சதவீதம் வேணும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனா நீங்க ஏன் அதிகாரத்தை கையில் வைத்து நீங்க ஏன் தரல?

பாட்டி சொன்னாங்க

பாட்டி சொன்னாங்க

நேர்மறையான விஷயங்களை எல்லாம் எதிர்மறையாக பேசி இருக்கிறார். முதல்ல, கல்லூரி மாணவிகளிடம் மோடியை தவறாக விமர்சித்து பேசியது தவறு. 1971-ல் அவங்க பாட்டி என்ன சொன்னாங்க, "வறுமையை வெளியேற்றுவோம்" என்று. அதை செய்தார்களா? ராபர்பட் வதேரா மேல கேஸ் இருக்கு? ஆனா பிரதமர் மேல இருக்கா? அவர் இந்த நாட்டுக்காக மட்டும்தானே உழைத்து கொண்டிருக்கிறார்" என்றார்.

English summary
Tamizhisai Soundarajan has condemned Rahul Gandhi for speaking defamation about the prime minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X