தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டி! திமுக தமிழச்சி, அதிமுக ஜெயவர்தன்.. களை கட்டும் களம்
சென்னை: மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தென் சென்னை தொகுதியில் தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் அவரது அறிவுரையை ஏற்ற தமிழிசை, ஆளுநர் , புதுவை துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை எந்த கட்சியிலும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதிமுறையால் அவர் பாஜகவிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் அவர் கடந்த முறை 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவியது. இருவருமே பெண் வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்த கட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், அறிவாளிகள், செல்வாக்கு உடையவர்கள் உள்ளிட்ட பண்புகள் இருந்ததால் எதிர்பார்ப்பு எகிறியது.
எனினும் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,24,161 வாக்குகளை பெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் களமிறங்கிய தமிழிசை சவுந்திரராஜன் 1,14,401 வாக்குகளை பெற்றார். கனிமொழி அந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 57.43 சதவீதம் ஆகும். தமிழிசை 20.17 சதவீத வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் தூத்துக்குடியிலேயே திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் விட்டதை பிடிக்க அதே தொகுதியில் தமிழிசை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தென் சென்னையில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக சார்பில் ஜெயவர்தனும் போட்டியிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து தமிழிசையும் போட்டியிடுகிறார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த போதிலும் சரி, ஆளுநராக இருந்த போதிலும் சரி தமிழிசை மிகவும் பண்பாளர். குமரி அனந்தன் வளர்த்த பண்பு என முன்னாள் முதல்வர் கருணாநிதியும் புகழாரம் சூட்டியுள்ளாராம். எந்த பிரஸ் மீட்டிலும் நிதானத்தை இழக்காமல் யார் மீதும் அவதூறு பரப்பாமல் உரிய பதிலடியை கொடுப்பதில் வல்லவர். இவருக்கு எப்போதும் அலங்கார பதவியை விட மக்கள் பணிகளை செய்வதுதான் பிடிக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட அலங்கார பதவியில் கூட புதுவையில் தமிழிசை நிறைய மக்கள் நல பணிகளை செய்திருந்தார். மருத்துவ முகாம்கள், குறைதீர் கூட்டங்களை எல்லாம் தமிழிசை நடத்தியுள்ளார். எல்லாம் சரி தென் சென்னையில் தமிழச்சி, ஜெயவர்தனை எதிர்த்து தமிழிசை வெல்வாரா என்பது பொறுத்திருந்துதான் தெரியும்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications