6 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது தெரியுமா? சந்திரபிரியங்கா ராஜினாமாவின் பின்னணியை உடைத்த தமிழிசை
சென்னை: அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதால் அவரை முதல்வர் ரங்கசாமி நீக்க பரிந்துரைத்தார், இதுதான் முதலில் நடந்தது. இதை தெரிந்துக் கொண்டே அவர் ராஜினாமா செய்துள்ளார் என புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தது மிகவும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

அரசியலில் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் நான் வருத்தப்படுவேன். சந்திரபிரியங்காவை பொருத்தமட்டில் அவருக்கு இத்தனை பிரச்சினைகள் இருக்கிறது என்பதை என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு முறை கூட அது குறித்து சொன்னதில்லை.
முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்திரபிரியங்காவுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. சந்திரபிரியங்காவின் பணிகளில் தொய்வு இருக்கிறது, அவரது பணிகளில் திருப்தி இல்லை என அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ரங்கசாமி 6 மாதங்களுக்கு முன்பே விரும்பினார்.
ஆனால் நான்தான் அதை தடுத்தேன். அமைச்சரவையில் இருக்கும் ஒரே பெண் அமைச்சர். எனவே அவரை நீக்க வேண்டாம், அவரை நேரில் அழைத்து பேசி நன்கு பணியாற்ற அறிவுரை சொல்லுங்கள் என்றேன். முக்கிய துறைகளை வைத்திருந்தும் கூட சந்திரபிரியங்கா சரியாக செய்யவில்லை என்பதால் அவரை நீக்குமாறு முதல்வர் என்னிடம் பரிந்துரைத்தார்.
எனவே சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தது முதலில் நடக்கவில்லை. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதுதான் முதலில் நடந்தது. எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் சந்திரபிரியங்கா ராஜினாமா கடிதத்தில் ஜாதி ரீதியில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
அது மிகவும் தவறான குற்றச்சாட்டு. முதல்வர் ரங்கசாமி சந்திரபிரியங்காவை தனது சொந்த மகளாகவே நினைத்தார். இத்தனை சீனியர் அமைச்சர்கள் இருக்கும் போது அந்த பெண்ணுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை முதல்வர் கொடுத்தார். ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சந்திரபிரியங்கா தனக்கு இருக்கும் பிரச்சினைகளை என்னிடம் சொல்லியிருந்தால் நான் தைரியமாக தட்டி கேட்டிருப்பேன். இப்போது என்னால் எதுவுமே செய்ய முடியாது. இது முதல்வர் எடுத்த முடிவு, அவருடைய கட்சியின் எம்எல்ஏவை அமைச்சரவையிலிருந்து நீக்கியுள்ளார். மற்ற மாநிலங்களை போல் ஆளுநர் இந்த நீக்கத்தின் மீது துணை நிலை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இந்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு செல்லும், பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஒப்புதல் வர வேண்டும். அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு சந்திரபிரியங்கா அடுத்த ராஜினாமா செய்வது போல் செய்து விட்டார். அரசியலில் ஒரு பெண் எந்த வகையில் வருத்தப்பட்டாலும் அது எனக்கு வருத்தமளிக்கக் கூடியதுதான். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
புதுவை அமைச்சர்கள் என்னை நிறைய முறை சந்தித்துள்ளார்கள். ஆனால் சந்திரபிரியங்கா என்னை அந்தளவுக்கு சந்தித்தது கிடையாது. எனினும் பெண் என்ற முறையில் அவரை பாதுகாக்கும் முயற்சியாக அவருக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுத்தோம். ஆனாலும் அவர் சரியாக பணியாற்றவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை எல்லா நேரத்திலும் அவருக்கு கொடுக்கப்பட்டது என்பதை சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications