அப்போ விஜய் ‘Invisible' ஆக இருந்து ஒரு வருடம் ஆகிருச்சு.. சிரித்துக்கொண்டே கலாய்த்த தமிழிசை!
சென்னை: தவெக தலைவர் விஜய் 'இன்விசிபிள்' ஆக இருந்தே ஒரு வருடம் ஆன நிலையில், Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, இன்று கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன் ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வை உருவாக்கிக் காட்டுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்றதற்கு அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை பேட்டி
அந்தவகையில், செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது குறித்துப் பேசியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகுதா? ஓ.. அவர் 'Invisible' ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றால் Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை. அவர் திரையில் Visible அக இருக்கிறார், அவரது ரசிகர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. அவர் களத்துக்கு இறங்கி வந்து மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சி.
வொர்க் ஃப்ரம் ஹோம் விஜய்
ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. அது போல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும், Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களைப் போன்ற தலைவர்கள், மக்களோடு மக்களாக பழகுகின்ற தலைவர்களே சரியான தலைவர்கள் என நாங்கள் நினைக்கிறோம. அதனை விஜய் முடிவு செய்யட்டும்" என்றார்.
பட்ஜெட்
மேலும் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சகோதர சகோதரிகளுக்கு வரியே இல்லை என்பது வரி வரியாக கொண்டாடக்கூடிய பட்ஜெட். எது கொடுத்தாலும் பற்றாக்குறையாக தான் இருக்கும், எதற்கு கொடுத்தாலும் திருப்திகரமாக இருக்காது. மருத்துவத்துறை, வேளாண் துறை, நெசவாளர்கள் மாணவர்கள் மகளிர், இளைஞர்கள் முதியவர்கள் என எல்லாருக்குமான பட்ஜெட் இது.
புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதனால் இளைஞர்கள் பெருமளவில் பயன்பெற உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வது சாதாரண விஷயம் அல்ல, அதிலும் அழகாக திருக்குறளை முன்னெடுத்து இருக்கிறார். இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
கனிமொழி போன்றோருக்கு
ஆனால் தமிழுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு பிடிக்காது. தமிழகத்தின் செங்கோலை டெல்லி நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்றாலும் மகிழ்ச்சி வராது. திருக்குறள் சொன்னாலும் மகிழ்ச்சி வராது. தமிழர் ஒருவர் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் மகிழ்ச்சி வராது.
பீகார் பட்ஜெட் என்று கனிமொழி கூறுகிறார். பீகாரியை அழைத்து தேர்தல் வியூகம் அமைப்பார்கள். அப்போது அவர் பீகாரியா என்பது தெரியாது. வளர்ந்து வரும் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை சகோதரத்துடன் ஏற்றுக்கொள்கிறோம், உங்களை விட தமிழகத்தின் மீது பாஜக அக்கறை கொண்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications