வருமான வரி நடைமுறைகளை ஈஸியாக்க வேண்டும்! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்!
சென்னை: வருமான வரி செலுத்தும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரி செலுத்துவதில் உள்ள மின்னணு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

பெருமைக் கொள்க
வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார்.

நாட்டின் வளர்ச்சி
நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது என்று தெரிவித்த அவர், 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு, பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றுவதற்கான ஏராளமான புதுமையான நடவடிக்கைகளை வருமானவரித்துறை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

வரி செலுத்தும் நடைமுறை
மேலும், இதன் மூலம் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார். வரி செலுத்துபவர்களையும், வருமான வரி அதிகாரிகளையும் நிகழ்ச்சியின்போது கௌரவித்த வருமான வரித் துறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். வருமான வரி நடைமுறைகளை மேலும் எளிதாக்குமாறு வருமான வரித்துறையை தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
Recommended Video

விழிப்புணர்வு தேவை
மின்னணு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைக்குமாறு ஊடகங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications