சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கத்தி..பட்டாக்கத்தி.. ஆஹா தமிழிசையின் படாபட் பேச்சு.. ரைமிங்கும் டைமிங்கும் சூப்பரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai Press meet | ஆஹா தமிழிசையின் படாபட் பேச்சு- வீடியோ

    சென்னை: கத்தி கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கிறார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

    சென்னை திருவொற்றியூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் துவக்கி வைத்தார்.

    சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    அப்போது தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    மகத்தான வெற்றி

    மகத்தான வெற்றி

    அவர் கூறுகையில் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து பாஜக சார்பில் எடியூரப்பா வெற்றி பெற்ற நிலையில் தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    வேலூரில் அதிமுக, பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    பாஜக மீது பயம்

    பாஜக மீது பயம்

    புதிய கல்வி கொள்கை குறித்து திமுகவினர் பேசி வருவது மக்கள் நலனுக்காக அல்ல. பாஜகவின் மீதுள்ள பயத்தாலேயே அதனை பேசி வருகின்றனர்.

    பட்டாக்கத்தி

    பட்டாக்கத்தி

    கத்தி கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். பட்டம் பெற படிக்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உண்டு.

    அனைவருக்கும் பங்கு

    அனைவருக்கும் பங்கு

    சினிமா துறையில் இருப்பவர்களுக்கும் அதற்கு முக்கிய பங்கு உண்டு என்றார் தமிழிசை. அண்மையில் சென்னை அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்சினைக்காக சிலர் நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி பட்டாகத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைதான் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    BJP State President Tamilisai Soundararajan says that students are coming to college with knife. Cinema Industry and Government has responsible to take them in a good way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X