"தாமரை மலர்ந்தே தீரும்".. எக்ஸிட் போல் முடிவுகளால் குஷியான தமிழிசை சௌந்தரராஜன்.. ஆனால் தென் சென்னை?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஒருசில இடங்களை வெல்லும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இதுகுறித்துப் பேசியுள்ளதை பார்ப்போமா?
மக்களவைத் தேர்தல் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பான எக்ஸிட் போல் முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி தான் முன்னிலையில் இருக்கிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 35+ இடங்களை திமுக கைப்பற்றும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் அதிமுகவும், பாஜகவும் போட்டிப் போட்டு கொண்டிருக்கின்றன.

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டது. தென் சென்னையில் திமுக சிட்டிங் எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. ஜெயவர்தனும், பாஜக சார்பில் முன்னாள் கவர்னர் தமிழிசை செளந்தரராஜனும் போட்டியிட்டனர். ஸ்டார் வேட்பாளர்களான 3 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தென் சென்னையில் தமிழிசை நிலை: தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 37 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்றும், இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 27 சதவீத வாக்குகளுடன் பெறுவார் என்றும், பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் 19 சதவீத வாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை மகிழ்ச்சி: இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் எண்கள் மட்டுமில்லாமல் மக்களின் எண்ணங்களை போல் இந்தியாவில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருக்கிறது எனக்கு இது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் தேர்தல் கருத்துக்கணிப்பின் மீது நம்பிக்கை கொண்டு இருந்தாலும் இன்னும் நிறைய இடங்களை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்பது உண்மை. தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை உயர்த்தப் போகிறோம் என்பதும் உண்மை. தமிழகத்தில் இன்னும் கூடுதலாக வெற்றி பெறும் போகிறோம் என்பது உண்மை.
நிலையையே மாற்றி உள்ளோம்: கூட்டணியில் ஒரு திராவிட கட்சி இருந்தால் மட்டுமே வெற்றி என்கின்ற நிலைமையை மாற்றி பாரதிய ஜனதா கட்சி தனித்தன்மையோடு இன்னும் இடங்களைப் பெற இருக்கிறோம் என்பது உண்மை. இதற்கு முன்னதாகவும் திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் ஒரு கூட்டணி அமைத்திருந்தோம். அதேபோல் இப்போதும் நடைபெற்று இருக்கிறது. இது எங்களின் வெற்றிக்கான அடித்தளம் என நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
295க்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், "கனவு காண்பது என்பது அவர்களுடைய உரிமை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் கனவெல்லாம் நனவாகாது. அதனால்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியே வந்த பிறகு அவர்கள் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை" என பதில் அளித்துள்ளார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications