மூடிய பள்ளிகளை காமராஜர் திறந்தாரா? ராஜீவ் காந்திய சொல்லி வைங்க! காட்டமாக பேசிய தமிழிசை! என்னாச்சு?
சென்னை: ராஜாஜி மூடிய பள்ளிகளை தான் காமராஜர் திறந்தார். கை காசு போட்டு பள்ளிகளை திறக்கவில்லை என பேசிய திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு ராஜீவ் காந்தியை கண்டிக்க வேண்டும் என கூறி இருக்கிறார் பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக மாணவர் அணி நிர்வாகியான ராஜீவ் காந்தி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்மான காமராஜர் குறித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," கள்ளுக் கடைகளை திறந்த ராஜாஜி பள்ளிக்கூடங்களை மூடினார். கள்ளு கடை தரும் போதையை விட பள்ளிக் கூடங்கள் தரும் போதை அதிகம். தங்களை விட படித்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிகளை மூடினார்.
அதே நேரத்தில் காமராஜர் ஒன்றும் தனது கை காசை போட்டு பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை. ராஜாஜி மூடிய பள்ளிக்கூடங்களை தான் திறந்தார். இதனால் தான் கல்வி கண் திறந்த காமராஜர் என கூறுகின்றனர். இன்று கல்வி என்ற ஒன்று இருப்பதற்கு பெரியார் தான் காரணம்" என பேசி இருந்தார். ராஜீவ் காந்தியின் இந்த பேச்சு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி," ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸின் மனம் புண்படும் வகையில் ராஜீவ் காந்தியை பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு காமராஜரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் காமராஜர் குறித்து பேசிய ராஜீவ் காந்தியை கண்டிக்கவேண்டும் என கூறியிருக்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில்,"பெருந்தலைவர் திரு.காமராஜரை பற்றி திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜூவ் காந்தியின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்கள் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொண்டு வந்தார். அதற்காக திரு.அழகப்பன் கமிட்டி அமைத்து முழுவதுமாக ஆராய்ந்தார்.
6000 மூடிய பள்ளிகளைத் திறந்ததார். 12000 புதிய பள்ளிகளை திறந்தார். 500 மக்கள் தொகை கொண்ட கிராமம் தோறும் பள்ளிகள் திறந்தார். மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் பள்ளிகள் திறந்தார்.
பள்ளிகள் திறந்தாலும் பசியோடு குழந்தைகள் படிக்க முடியாது என்பதால் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் திரு.காமராஜர் செயல் வீரராக இருந்தார். அவரின் கல்வித் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று இருக்கிறது. சொந்த காசிலா அவர் பள்ளிக்கூடங்களை திறந்தார் என்று கேள்வி கேட்கிறீர்களே?
பெரியார் பெயரில் இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தஞ்சை பெரியார் பல்கலைக்கழகம் போன்ற பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது என்பதை உங்கள் இனமான தலைவர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டிருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். திமுகவினரின் இந்த ஆணவ பேச்சுகளால் பெருந்தலைவர் காமராஜரால் பலன் பெற்ற பலரது மனம் புண்பட்டு இருக்கிறது.
கல்விக்கு பெரியார் தான் காரணம் என்று சொல்வது உங்களின் பொய்யுரை. பெரியார் வாய் சொல் வீரராக மட்டுமே இருந்தார். உடனே தமிழக முதல்வர் தலையிட்டு திமுக நிர்வாகி ராஜுவ் காந்தியை கண்டிப்பது மட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். பெரியாரை ஆராதிக்கிறேன் என்று நினைத்து பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்" என கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications