2 மாநில ஆளுநர்.. 'அக்கா எங்க எப்படி இருந்தாங்க'.. மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேசனில் திகைப்பு
சென்னை: சென்னை மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேசனில் கடும் வெயிலுக்கு நடுவே உட்கார்ந்திருக்கும் அக்கா யார் என்று பார்த்தால், அது தமிழிசை சௌந்திரராஜன்.. தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான தமிழிசை சௌந்திரராஜன், மக்களோடு மக்களாக பயணிப்பதற்காக, மின்சார ரயிலில் ஏற காத்துக்கொண்டிருந்த படம் தான் வெளியாகி உள்ளது.
திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே ஸ்டார் வேட்பாளர்கள் ஆவர். திமுக சார்பில் இந்த முறை சிட்டிங் எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் களம் இறங்குகிறார். இவர் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கை ஆவார்.. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தன் களம் இறங்கி உள்ளார். இதேபோல் பாஜக சார்பில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் களம் இறங்கி உள்ளார். நாம்தமிழர் கட்சி சார்பில் , சு.தமிழ்ச்செல்வி களம் இறங்கி உள்ளார் களத்தில் 4 முனைப் போட்டி நிலவி உள்ளது.

சென்னையில் சும்மாவே கோடை வெயில் அனலை கிளப்பும்.. அந்த அனலுக்கு நடுவே வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் தற்போது உக்கிரமாகி உள்ளது. மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்று திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியனும், 2014ல் வென்று 2019ல் தோற்ற ஜெயவர்தன் எப்படியாவது மீண்டும் என்று கடும் முயற்சி செய்கிறார். இதுதவிர ஆளுநராக இருந்து மீண்டும் அரசியலுக்கு வந்த தமிழிசை எப்படியாவது வென்று தாமரைய மலர செய்ய கடுமையாக மல்லுக்கட்டி வருகிறார்..
தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை சென்னை மாநகரத்தின் மிகவும் பணக்கார பகுதிகள் உள்ள தொகுதியாகும். சென்னையின் மையப்பகுதியில் உள்ள தொகுதிகள் அனைத்தும் தென் சென்னையில் இடம் பெற்றுள்ளன. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்டதாகும். இங்கு ஆறு லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தென்சென்னை தொகுதியில் ஐடி நிறுவனங்கள், மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பழமையான கோயில்கள், சுற்றுலாப் பகுதிகள், பிரபலமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. சென்னையின் வானுயுர்ந்த அடுக்குமாடிகள் அனைத்தும் தென்சென்னை தொகுதிகளில் தான் உள்ளன. தென்சென்னை முழுவதுமே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டதாக உள்ளது.. இங்கு திமுக, அதிமுகவைப் போல் பாஜகவிற்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் பணக்காரர்கள் அதிகம் உள்ள தொகுதியான தென் சென்னையில், திநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி போன்ற தொகுதிகளில் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.
தமிழிசை சௌந்திரராஜன் எப்படியாவது இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று வருகிறார்.. வீதி வீதியாக களம் இறங்கி தினமும் பிரச்சாரம் செய்து வருகிறார் தமிழிசை.. இந்நிலையில் மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்த தமிழிசை, ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்திருந்தார். மக்களோடு மக்களாக பயணித்து நிலையை அறிய தமிழிசை மின்சார ரயிலில் ஏறுவதற்காக வந்திருந்தார். அவர் ரயில் நிலையத்தில் காத்திருந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நேரத்தில் தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவர், இப்படி கடும் வெயிலில், வியர்த்து விறுவிறுத்துப்போய்,ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்திருந்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications