தலைவலி.. அந்த 5 மாவட்டங்கள்தான் சிக்கலே.. ரொம்ப கவனமாக இருங்க.. ராதாகிருஷ்ணன் சுளீர் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் 5 மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை உச்சத்தை கடந்து உள்ள நிலையில், கேஸ்கள் வேகமாக சரிந்து வந்தன. இதையடுத்து லாக்டவுன் தளர்வுகளும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது.

மாநிலம் முழுக்க மூன்று வகையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகைக்கும் ஏற்றபடி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன.

எங்கு

எங்கு

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்படவில்லை. இங்கு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இங்கு கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன.

ஆனால்

ஆனால்

ஆனால் லாக்டவுன் தளர்வு கொண்டு வரப்பட்ட மற்ற மாவட்டங்களில் கேஸ்கள் அப்படியே உயர தொடங்கி உள்ளன. அதிலும் வடமாவட்டங்களில் பலவற்றில் மீண்டும் கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. நேற்றே தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கேஸ்கள் உயர்வதாக செய்திகள் வெளியாகின. முக்கியமாக பேருந்து போக்குவரத்து தொடங்கிய மாவட்டங்களில் கேஸ்கள் உயர்வதாக கூறப்பட்டது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 4481 கேஸ்கள் பதிவானது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37526 ஆக ஆகியுள்ளது. மாநிலம் முழுக்க ஆக்டிவ் கேஸ்கள் மொத்தமாக குறைந்தாலும் 5 மாவட்டங்களில் மட்டும் கடந்த சில நாட்களாக கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறையவில்லை.

கொரோனா

கொரோனா

மாறாக இந்த மாவட்டங்களில் ஒன்று கேஸ்கள் உயர்கிறது, அல்லது தினமும் ஒரே அளவு கேஸ்கள் வருகிறது. மக்கள் வெளியே வருவதாலும், அதிக பேர் வெளியே நடமாடுவதாலும் கேஸ்கள் குறையாமல் உள்ளது. அதிலும் கடந்த 3 நாட்களாக இங்கு கேஸ்கள் உயர்ந்து வருகிறது. இந்த மாவட்டங்கள் மூலம் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு அலையை உருவாக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தலாம்.

அலை மீண்டும்?

அலை மீண்டும்?

இந்த நிலையில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த 5 மாவட்டங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கேஸ்கள் குறையவில்லை. இங்கு குறையாமல் உள்ளது அல்லது அதிகரிக்கிறது. தளர்வுகள் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பரவல்

பரவல்

இங்குதான் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இங்கு மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் கட்டுப்பாடுகளையும், தடுப்பு பணிகளையும் தீவிரமாக, வேகமாக செயல்படுத்த வேண்டும். இங்கு சோதனைகளை அதிகரிப்பது மட்டுமே ஒரே வழி. அதன் மூலமே கேஸ்களை கண்டுபிடித்து, பரவலை கட்டுப்படுத்த முடியும், என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+