Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம சென்னையா இது?! - உலகத்தரத்தில் உருவாகும் 'ஃபின்டெக் சிட்டி'

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஏஞ்சல்' முதலீட்டில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. இதற்காக கடந்த வருடமே முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் வகுத்து சக்சஸ் செய்து காட்டியிருக்கிறார். அடுத்ததாக, 'ஃபின்டெக் சிட்டி' என்ற பிரமாண்ட வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது

அது என்ன ஃபின்டெக் (Fintech) சிட்டி?

அது என்ன ஃபின்டெக் (Fintech) சிட்டி?

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, 'தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது சர்வதேச வளர்ச்சியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும்' என்பதற்காகப் பல புதிய திட்டங்கள் உயிர்பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் 'சி.எம் டேஷ் போர்டு'.

அரசாங்கம் சார்ந்த தகவல்களை விரல்நுனியில் கொண்டு வருவதற்காக உருவாகிவரும் மிகச் சிறப்பான தொழில்நுட்பக் களம்தான் இந்த டேஷ்போர்டு. இன்று வளர்ந்த நாடுகளில் வளத்தை அதிகரிக்க மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டங்களை வகுப்பதற்காகப் பயன்பாட்டில் உள்ள ஒரு தொழில்நுட்பம்தான் இது.

அதை அப்படியே காபி அண்ட் பேஸ்ட் செய்யாமல் அதில் சில தனித்துவமான நுட்பங்களை இணைத்துக் கொண்டுள்ளது, 'தமிழ்நாடு சி.எம். டேஷ்போர்டு'. இதைப்போல வளர்ந்துவரும் ஒரு துறைதான் ஃபின்டெக். இதற்காக '2021 தமிழ்நாடு ஃபின்டெக் கொள்கை'யை ( FinTech Policy 2021) வெளியிட்டு புதிய வழிகாட்டலைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதன்மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தலைசிறந்த 'ஃபின்டெக் சிட்டி'யாக சென்னையை மாற்றுவதற்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

Fintech என்றால் என்ன?

Fintech என்றால் என்ன?

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி (GSDP) கடந்த 2021-22 நிதியாண்டின் தரவுகளின்படி 19.02 லட்சம் கோடி. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் என்பது இதே நிதியாண்டின் நிலவரப்படி தேசிய சராசரியைவிட 94 சதவீதம் அதிகம் உள்ளது.

இதில் கவனமாக கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், உலகையே முடக்கிப்போட்ட 'கொரோனா' தொற்று பரவல் காலத்தில் ஒட்டுமொத்த நாடே முடங்கிப்போனது. அப்படியொரு அசாதாரண நிலையையும் சமாளித்து தனது பொருளாதாரத்தைத் தமிழ்நாடு வலுவாக்கி வந்துள்ளது.

கொரோனா காலம், தனிமைப்படுத்திக் கொள்வதைத்தான் நமக்குக் கற்று தந்தது. இதனால், நமது அத்தியாவசிய தேவைகளுக்காக முழுமையாக இணையத்தையே சார்ந்து வாழவேண்டி இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் பல்வேறு செயலிகள் அறிமுகமாகின. வங்கி ஏ.டி.எம் மையத்துக்குச் சென்று பணம் எடுப்பது என்ற முறைகள் முழுமையாக மாறி, அனைத்து சேவைகளையும் போன் பே (Phone pe), ஜிபே (Gpay) போன்ற செயலிகள் மூலம் நிறைவேற்றிக் கொண்டோம்.

அந்தச் சேவைகள் அனைத்தும் முன்பைவிட எளிதாக மாறிவிட்டன. இந்த மாற்றத்தால் FinTech நிறுவனங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்தன. சுருக்கமாகச் சொன்னால் முழுவதுமாக இணைய வசதிகளுடன் சேர்ந்து நாம் வாழப்போகும் உலகம்தான் FinTech. இதன் ஒரு பகுதியாகத்தான் 'ஃபின்டெக் சிட்டி' என்ற புதிய வளர்ச்சியைத் தமிழ்நாடு அடையப்போகிறது.

இணைய வளர்ச்சி என்பது தமிழ்நாட்டுக்கு ஒன்று புதிய விஷயம் இல்லை. எந்த ஒரு ஐடி நகரத்துக்குச் சென்றாலும் அங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பணியில் உட்கார்ந்திருப்பார் என்பதுகூட பழைய கதை. இன்றைக்கு கூகுள் போன்ற இணைய உலகின் மகாராஜாவாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை வந்துவிட்டார். அந்தளவுக்கு ஐ.டி தொழில்நுட்பத்துடன் இணைந்தே தமிழ்நாடு வளர்ந்து வந்துள்ளது.

எனவேதான், "இந்தியாவின் எந்தவொரு முக்கியமான ஐடி நகரத்துக்குச் சென்றாலும், தமிழ்நாடு இளைஞர்களின் துறைசார்ந்த அறிவும் வேலை சார்ந்து அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதனால்தான், எனது நிறுவனத்தைச் சென்னையில் நிறுவினேன்" என்று CredAvenue என்ற நிதிநுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கவுரவ் குமார் ஒருமுறை பேசியிருந்தார்.

இவரது நம்பிக்கைக்குத் தமிழ்நாட்டில் முதலில் விதை போட்டவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவர்தான் 1990 ஆம் ஆண்டுகளிலேயே சென்னையில் 'டைடல் பார்க்' நிறுவியதன் மூலமாக தொழில்நுட்பப் புரட்சியை உண்டாக்கினார்.

அதற்கான பாதையைத் திறந்துவிட்டதுடன் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் இன்னொரு வடிவத்தைத்தான் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதிதான் 2021 நிதிநுட்பக் கொள்கை.

'வருங்காலங்களில் FinTech துறைதான் உலகையே கட்டுப்படுத்தக் கூடியதாக மாறப்போகிறது' என்கிறார்கள் நிபுணர்கள். '2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்தப் பொருளாதாரத்தில் 335 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதாரத்தை நிதிநுட்பத் துறைதான் (Fintech) ஆக்ரமிக்கப் போகிறது' என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் நிதிநுட்பக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இதனால் தமிழ்நாடு எப்படி மாறும்?

இதனால் தமிழ்நாடு எப்படி மாறும்?

இந்தத் திட்டத்தினால் சென்னை 'ஃபின்டெக் சிட்டி' ஆக மாற உள்ளது. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பேடிஎம், போன் பே போன்ற புதிய நிதிநுட்ப நிறுவனங்களை 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தொடங்க முன்வருபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை பல சலுகைகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு டான்சீட் நிதி ஆதாரம் மூலமாக 5 கோடி ரூபாய் வரை ஆரம்பகட்ட, அதாவது ஆதார நிதி வழங்குவது, டிட்கோ நிறுவனம் மூலமாக வளர்ந்துவரும் துறைக்கான ஆதார நிதி 20 கோடி ரூபாய் அளவில் வழங்குவது என நிதிநுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான தொடக்கநிதியை வழங்குவதற்கு ஸ்டாலின் அரசு முன்வந்துள்ளது.

இப்படி நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன லாபம்? நிச்சயம் இருக்கிறது. 50 கோடி ரூபாய்க்கு மேலாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனத்துக்கு மூன்று ஆண்டுகளுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்குவதால், அந்நிறுவனம் 3 ஆண்டுகளுக்குள் 300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்பது அரசின் விதி.

அரசு கொடுக்கும் நிதிச்சலுகையால் புதிய நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரும், கூடவே வேலைவாய்ப்பும் பெருகும், அதன்வழியே மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி பெறும்.

தவிர, நிதிநுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் முதலீடுகளைக் கண்காணிப்பதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் நிதிநுட்ப ஆளுமைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார். இதனைச் செயல்வடிவத்துக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்டமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள fintech நகரம் ஒன்றை அரசு உருவாக்க உள்ளது.

கோவை, திருச்சி, மதுரை

கோவை, திருச்சி, மதுரை

'சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் மற்றும் காவனூர் ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக ஃபின்டெக் நகரம் உருவாக்கப்படும்' என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்பே அறிவித்திருந்தார். முதல்கட்டமாக. நந்தம்பாக்கத்தில் 165 கோடி மதிப்பீட்டில் இந்நகரம் உருவாக்கப்பட உள்ளது.

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, 'தமிழ்நாடு ஃபின்டெக் துறையில் மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது' என்று நிதியமைச்சர் கூறியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். கூடவே, தனி 'ஃபின்டெக் செல்' உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதாவது, சுமார் 165 கோடி ரூபாயில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சியைச் சென்னையை மட்டுமே மையமாக வைத்துத் திட்டமிடாமல் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய உள்ளனர். இரண்டாம் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த 'ஃபின்டெக் சிட்டி' அமைய உள்ளது.

அடுத்து, மிகப் பிரம்மாண்ட திட்டமாக பூவிருந்தவல்லி சாலையில் ஃபின்டெக் சிட்டி உருவாக உள்ளது. சென்னையில் உள்ள பெரிய 5 தொழில்நுட்ப பூக்காக்களுடன் மெட்ரோ ரயிலின் 4 தடங்களின் இணைப்புகளுடன் கூடிய வசதியுடன் இந்த நகரம் கட்டமைக்கப்படும்.

இதன்மூலம், போக்குவரத்து வசதிகள் அனைத்தும் மிக எளிமையாக்கப்படும். இந்தப் பகுதியில் எல் அண்ட் டி இன்னோவேஷன் கேம்பஸ் சுமார் 6.5 மில்லியன் சதுரஅடியில் கட்டி எழுப்பப்பட உள்ளது. மேலும் RMZ One paramount தொழில்நுட்ப நிறுவனம் 7 மில்லியன் சதுர அடியில் வர உள்ளது. கூடவே, டி.எல்.எஃப் நிறுவனம் 6.6 மில்லியன் சதுரஅடியில் வர உள்ளது. அந்தவகையில், நாம் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு வசதிகளைக் கொண்ட நகரமாக 'ஃபின்டெக் சிட்டி' உருவாக உள்ளது.

ரூ,993 கோடி செலவில் வணிக வளாகம்

ரூ,993 கோடி செலவில் வணிக வளாகம்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 'அடையாறு' மிகப் பெரியளவில் மாற உள்ளது. தற்போது அடையாறு பேருந்து பணிமனை அருகே சென்னை மெட்ரோ ரயில்நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனையொட்டி அடையாறு பேருந்து நிலையத்தில் 9 மாடி வணிகவளாகம் ஒன்று 993 கோடி செலவில் கட்டப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த வணிகவளாகத்தில் ஒரு மால் உருவாக உள்ளது. அதில் 10 மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் வரவுள்ளது. மூன்றாம் தளம் முதல் 9 தளங்கள் வரை திரையரங்கங்களும் வணிகவளாகமும் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 அடுக்கு அண்டர்கிரவுண்ட் தளங்கள் அமைய உள்ளன. பேருந்து நிறுத்தத்துக்காக 2 தளங்கள் அதில் அடக்கம். இதைப்போலவே வரும் காலங்களில் அடுத்தடுத்து தாம்பரம், தி.நகர், சைதாப்பேட்டை, மந்தைவெளி மற்றும் திருவான்மியூர் பேருந்து பணிமனைகள் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளன.

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வரவுள்ள ஃபின்டெக் சிட்டியின் மாதிரி திட்ட வரைபடங்கள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கின்றன. ஏதோ அமெரிக்காவில் இருப்பதைப்போல நம் கண்களுக்குத் தெரிகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும்போது, மிகப்பெரிய அலுவலகங்களுக்கான கட்டடங்களை நாம் பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+