"எல்லாத்துக்கும் எழுந்து நிக்கறீங்க" ஆளுநருக்கு எதிரான தீர்மானம்! தவறுதலாக எழுந்து நின்ற பாஜக MLAகள்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். முன்னதாக ஆளுநருக்கு எதிராக விவாதம் நடத்தக் கூடாது என்பதில் தீர்மானம் கொண்டு வந்த போது அங்கே சிரிப்பலை ஏற்பட்டது.
இப்போது ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் பல தீர்மானங்களுக்கு அரசு ஒப்புதல் அளிப்பதில்லை என்று ஆளும் தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பக் கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் எனப் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் தொடர்பாகச் சட்டசபையில் எந்தவொரு விவாதமும் நடத்தக் கூடாது என்று இருந்த விதிகளைத் தளர்த்தும் வகையில் தீர்மானம் ஒன்றை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பு: பொதுவாகக் குரல் வாக்கெடுப்பு மூலமே பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலையில், 3இல் ஒரு பங்கு ஆதரவு தேவை என்பதால் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு எடப்பாடிக்கு அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இப்படி எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற்றது. அதன் பிறகு இப்போது தான் மீண்டும் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த தீர்மானம் கொண்டு வரும் முன்னரே, அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துவிட்டனர். இதையடுத்து கதவுகளை அடைத்து வாக்கெடுப்பு நடத்தச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ய பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

சிரிப்பலை: சட்டசபையில் ஒவ்வொரு பகுதி வாரியாக ஆதரிப்போரை எழுந்து நின்று வாக்களித்தனர். அப்போது, பகுதி 4இல் உள்ளவர்களில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்க வேண்டும் எனச் சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். அப்போது தவறுதலாக பாஜக உறுப்பினர் சிஆர் சரஸ்வதியும் எம்ஆர் காந்தியும் எழுந்து நின்றனர். இதைப் பார்த்து மற்ற உறுப்பினர்களும் ஷாக் ஆகினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட இருவரும் உடனடியாக அமர்ந்துவிட்டார். இதனால் அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது.
இதையடுத்து பகுதி 4இல் தீர்மானத்தை ஆதரிப்போர் தனித்தனியாக முதலில் வாக்களித்தனர். இதையடுத்து தீர்மானத்தை எதிர்ப்போர் வாக்களிக்கும்படி சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார்.
எம்ஆர் காந்தி: இப்போது இரு பாஜக எம்எல்ஏக்களும் சரியாக எழுந்து நின்றனர். அப்போது சபாநாயகர் "நீங்க என்ன எல்லாத்தும் எழுந்து நிக்கறீங்க.." என்று சொல்ல அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக இரு வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவானது. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் அவைக்கு வராத நிலையில், அவைக்கு வந்திருந்த பாஜகவின் இரு உறுப்பினர்கள்- எம்ஆர் காந்தி, சரஸ்வதி மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் நிறைவேற்றியதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் குறித்துத் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
மோதல் உச்சம்: தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் உச்சமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் முதல்வர் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
முன்னதாக சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, "சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள்" என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போதே முதல்வர் ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தான் சட்டசபை மசோதாக்களை அனுப்பக் கால நிர்ணயம் செய்தல், ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications