அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கமலாலயத்தில் சீட் கேட்டு ஏராளமான நிர்வாகிகளும் தலைமையை நாடி வருவதால், பஞ்சாயத்து பெரிதாகி இருப்பதாக சொல்லுகின்றனர்.
இன்னும் ஒரு நாட்களில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் கொடுக்க முன் வந்திருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியை விட ஒரு தொகுதி கூடுதலாக வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது. இதனால் 29 தொகுதிகள் வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சென்னையில் 4 தொகுதிகளை பாஜக கேட்டுள்ள சூழலில், தி நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று அதிமுக தெளிவாக கூறிவிட்டது. இந்த இரு தொகுதிகளில் போட்டியிட பாஜகவில் பலரும் முட்டி மோதி வருகின்றனர். ஏற்கனவே வேளச்சேரி தொகுதி எஸ்ஜி சூர்யா பணியாற்றி வரும் சூழலில், அந்த தொகுதியில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜனும் காய் நகர்த்தி வருகிறார்.
மறுபக்கம் தி நகர் தொகுதியில் போட்டியிட வினோஜ் பி செல்வமும் ஆர்வமாக உள்ளார். பொங்கல் பண்டிகையின் போது தொகுதியில் பரிசுப் பொருட்களையும் வழங்கி இருந்தார். அதேபோல் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை மாநில அரசியலுக்கு திரும்ப டெல்லி பாஜக அறிவுறுத்திவிட்டது. இதன் காரணமாக அவினாசி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறாராம் எல்.முருகன்.
அதுமட்டுமல்லாமல் சட்டசபைத் தேர்தலுக்கு பின் எல்.முருகனின் மத்திய இணையமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளாக மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பணியாற்றியுள்ள சூழலில், அவரை மாநில அரசியலுக்கு திரும்ப பாஜக உத்தரவிட்டிருக்கிறது.
அதேபோல் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றாலும், பல்லடம் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. மறுபக்கம் நெல்லை தொகுதியில் நிலவரம் சரியில்லாததால், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கு மாறப் போவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
வானதி சீனிவாசனும் கோவை வடக்கு தொகுதி மாறுகிறார். இன்னொரு பக்கம் சரத்குமார், விஜயதரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோருக்கு சீட் இன்னும் உறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி, திருச்செங்கோட்டில் கேபி ராமலிங்கம், ஒசூரில் நரசிம்மன் உள்ளிட்டோர் சீட் கேட்டு காய் நகர்த்தி வருவதாக கமலாலய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
-
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications