ரூ.1,302 கோடி.. தமிழக தேர்தல் நடத்த எத்தனை கோடிகள் ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் கொடுத்த பதில்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2021 சட்டசபைத் தேர்தலை நடத்த ரூ.975 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்ட சூழலில், வேட்புமனு பரீசிலனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுபோல், தமிழ்நாடு முழுவதும் 3,302 பதற்றம் நிறைந்த இடங்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ரூ.462 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்த ரூ.975 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2024 லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க முடிக்க ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இம்முறை கூடுதலாக ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வருவார்கள்.
அதேபோல் 85 வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதியுடன் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநில தேர்தல்கள் முடிவடைய உள்ளது. அதன்பின் தமிழக சட்டசபைத் தேர்தல் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications