சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்ரெட்டாக வந்த ஃபைல்.. உள்ளே புகுந்து பேசிய "4 பேர்".. பதறிப்போன ஸ்டாலின்.. பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பாக வெளியிடப்பட்ட 173 வேட்பாளர்களின் பட்டியலுக்கு பின் என்ன நடந்தது? இவர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது.

உன்னுடைய சுற்று வரும் வரை காத்திரு.. என்று அண்ணா கூறினார். அதை மனதில் வைத்து திமுகவினர் செயல்பட வேண்டும். யாரும் பிடிவாதம் பிடிக்க கூடாது. பிடிவாதம் பிடித்தால் உங்களுக்கு கலைஞரின் உடன்பிறப்புகள் என்று தகுதியே இருக்காது.. என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதற்காக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

திமுக வெளியிட்ட 173 வேட்பாளர்களின் பட்டியலை பார்த்து சில மூத்த நிர்வாகிகள் திமுகவிற்குள் கொதித்து போய் இருக்கிறார்கள். இவர்களை சமாதானப்படுத்தும் விதமாகவே கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

 வேட்பாளர்

வேட்பாளர்

சரியாக சொல்ல வேண்டும் என்றால் திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் சிறப்பாகவே இருந்தது. மூத்த உறுப்பினர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்து இருந்தார். சில புது முகங்களுக்கும் வாய்ப்பு கொடுத்து உள்ளார். வழியே இல்லாத காரணத்தால் மட்டும் சில நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

சந்தோசம்

சந்தோசம்

மொத்தத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை பார்த்து பெரும்பாலான நிர்வாகிகள் சந்தோஷத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் சில நிர்வாகிகள் மட்டும் இந்த வேட்பாளர் பட்டியலை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. 4-5 வேட்பாளர்களின் தேர்வை இவர்கள் விரும்பவில்லை. இதுதான் திமுகவில் ஏற்பட்டு இருக்கும் சிறிய பிரச்னைக்கு காரணம்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

சிலருக்கு தேவையின்றி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை உடனே மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம் என்று சில மூத்த நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். இதுதான் ஸ்டாலினின் அந்த திடீர் அறிக்கைக்கு காரணம்.

பதற்றம்

பதற்றம்

தேர்தல் நேரத்தில் கோஷ்டி மோதல் வந்துவிட கூடாது என்பதால் பதறிப்போய் ஸ்டாலின் இந்த அதிரடி அறிக்கையை வெளியிட்டு இருந்தார். திமுகவில் மேலிடத்தில் இருக்கும் நான்கு பேர் கொடுத்த அழுத்தம்தான் முக்கியமான சில வேட்பாளர்கள் சிலர் தேர்வு செய்யப்படாமல் போனதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் நான்கு பேர் ஒரு லிஸ்ட்டை தலைவரிடம் கொடுத்துள்ளனர்.

லிஸ்ட்

லிஸ்ட்

இந்த லிஸ்டில் இருக்கும் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ஒரு பக்கம் எதிர்ப்பு எழுவதற்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் ஸ்டாலின் குடும்பத்தில் இருக்கும் சில உறுப்பினர்கள் கொடுத்த வாய்ஸும் இதற்கு காரணம் ஆகும். ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள சிலரும் வேட்பாளர் தேர்வில் கருத்து கூறியுள்ளனர் .

வாய்ப்பு

வாய்ப்பு

இதெல்லாம் போக யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிகே மூலம் சீக்ரெட் ஃபைல் ஒன்றும் திமுக தலைமைக்கு சென்றுள்ளது . இதில் 180 வேட்பாளர்களின் லிஸ்ட் வரை இருந்துள்ளது.பலரை எடுக்கவே கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

ஆய்வு

ஆய்வு

இதை எல்லாம் ஒருங்கிணைத்தே 173 வேட்பாளர்களை ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார் என்கிறார்கள். ஆனால் இதில் சில பெயர்கள் இடம்பெற்றதை விரும்பாமல்தான் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது . அவர்களை தேர்தலுக்கு முன் சமாதானப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அப்போதுதான் தேர்தல் நேரத்தில் பிரச்சனை வராது என்று ஸ்டாலின் கருதுகிறார்.

விருப்ப மனு

விருப்ப மனு

இதனால் தான் விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான் இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே .. உங்கள் சுற்று வரும் வரை காத்திருங்கள் பிடிவாதம் பிடிக்காதீங்க.. என்று ஸ்டாலின் வெளிப்படையாக கூறி உள்ளார்.

English summary
Tamilnadu Assembly Election: What really happened behind the selection of 173 candidates for DMK?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X