அதிகாலையிலேயே வாக்களிக்க வந்த அஜித்... லைனில் நின்ற ரசிகர்களுக்கு "செம" அட்வைஸ்.. ப்பா தல தலதான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலூக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் நடிகர் அஜித் அதிகாலையிலேயே திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித்
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடந்து வரும் நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித் அதிகாலையிலேயே திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் 6.30 மணிக்கே அஜித் நேரடியாக வந்து வாக்குச்சாவடி மையத்தில் லைனில் நின்றார்.

சூப்பர்
இவருக்கு திருவான்மியூரில் வாக்கு உள்ளது. ஷாலினியுடன் வந்து இவர் வாக்கு பதிவு மையத்தில் 30 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார். மிகவும் எளிமையாக, ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக வாக்களித்துவிட்டு அஜித் கிளம்பி சென்றார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.

செல்பி
கொரோனா காலம் என்பதால் இவர் காலையிலேயே வாக்களிக்க வந்தார். கையில் கிளவுஸ் அணிந்து மிகவும் பாதுகாப்பாகவே வாக்களிக்க வந்தார். 9 மணிக்கு மேல் வந்தால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அஜித்தை பார்க்க பலர் கூடுவார்கள். இது கொரோனா பரவல் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பு
இதனால் இன்று செல்பி எடுக்க வந்த ரசிகர்களையும் அஜித் தவிர்த்தார். கூட்டம் கூட வேண்டாம்,.. இது கொரோனா காலம்.. எல்லோரும் லைனில் நின்று வாக்களியுங்கள் என்று செல்பி எடுக்க வந்த ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். அஜித் உடன் இருந்த சில போலீசார் அதிகமாக கூட்டம் கூடாமல் பார்த்துக்கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications