தமிழக சட்டசபையின் 2ஆம் நாள் கூட்டம்.. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிப்பு
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் களேபரங்களுக்கு மத்தியில் இன்றைய தினம் 2ஆம் நாள் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதன் பிறகு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை தொடங்கிய போதே திமுக கூட்டணி கட்சிகள் அமளியிலும் கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஏற்கெனவே ஒரு நிகழ்வில் தமிழ்நாட்டை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்றைய தினம் அவர் பேசும் போது எங்கள் நாடு தமிழ்நாடு என திமுக கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து தொடர்ந்து அவரை பேசவிடாமல் கூச்சல் செய்த நிலையில் அவர்கள் ஆளுநர் உரையை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் ஆளுநர் அரசு எழுதி கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. ஆளுநர் பேசி முடித்தவுடன் முதல்வர் ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து ஆளுநர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். தேசிய கீதம் பாடி மரபுபடி ஆளுநரை வழி அனுப்பி வைக்க வேண்டிய நிலையில் ஆளுநர் தாமாக புறப்பட்டு சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நிலையில் நேற்றைய தினம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் குழு கூட்டத்தில் சட்டசபை வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 13 ஆம் தேதி வரை அவையில் என்னென்ன நிகழ்ச்சிகள் நிகழும் என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தமிழறிஞர் முனைவர் க நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஔவை நடராஜன், பிரபல ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் பீலே, ஈரோடு கிழக்கு சட்டசபை உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 13 ஆம் தேதி வரை அவையில் என்னென்ன நிகழ்ச்சிகள் நிகழும் என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவை கூடியது. அப்போது தமிழறிஞர் முனைவர் க நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஔவை நடராஜன், பிரபல ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் பீலே, ஈரோடு கிழக்கு சட்டசபை உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு 2 நிமிடங்களுக்கு மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதன் பிறகு இன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டு நாளை மீண்டும் கூடுகிறது.












Click it and Unblock the Notifications