தமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூடுகிறது.. எடப்பாடி அரசுக்கு அப்படி ஒரு சிக்கல் வருமா?
சென்னை: ஜூன் முதல் வாரத்தில் துவங்கி இருக்க வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் ஆளும் அதிமுக அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடைசியாக கடந்த பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடந்தது. 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பிப்வரி 14ம் தேதி தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த முறை கூட்டத்தொடர் தாமதமாக வரும் ஜூன் 28ம் தேதி துவங்க உள்ளது.
ஒரு மாதம் காலம் வரை நடக்க உள்ள இந்த பேரவை கூட்டத்தெடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைகளின்மீது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லாமல் போனால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. எனினும் அதிமுகவுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கட்சி மாறி வாக்களித்தால் தான் அப்படி ஒரு நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications