விசாயத்துக்கு தனி பட்ஜெட்; 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு... ஆளுநர் உரையில் உறுதி
சென்னை: விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை தொடர்ந்து சட்டசபை கூட்டப்பட்டது. முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்கள் அப்போது பதவி பிரமாணம் ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

சட்டசபை கூட்டம்
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.

தமிழில் பேசிய பன்வாரிலால்
வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் இனிமையான மொழி என புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில், எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்- ஊழலை அகற்றி விடும்- இது என் செய்தி. தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதோர் என பாரபட்சமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.

மாநில சுயாட்சி
மேலும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடித்தளமாக கொண்ட அரசாக செயல்படும்; மாநில சுயாட்சி என்கிற இலக்கை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஆளுநர் தமது உரையில் தெரிவித்தார்.

விவசாய பட்ஜெட்
வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

69% இடஒதுக்கீடு- கச்சத்தீவு
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்; கச்சத் தீவை மீட்பதற்காக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்; மீனவர் நலனுக்கான தேசிய ஆணையம் உருவாக்க வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications