தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூடும்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூடும் என்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு கூட்டம் சட்டசபையில் நடந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூட உள்ளது. ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூடுகிறது. இதையடுத்து சட்டசபை அலுவல் கூட்டம் நடைபெறும். இந்த அலுவல் கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாள் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்படும்.
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூடுகிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சட்டசபை நடைபெறும் என்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமின்றி, பணியாளர்கள் எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் செய்து, நெகட்டிவ் வந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்.
முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையின் மீது விவாதம் நடைபெறும். ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும். அனைத்து கட்சியினருக்கும் இதில் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்படும்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!












Click it and Unblock the Notifications