தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் LIVE: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது ஆளுநர் கடமை என்று இந்த விவாதத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி விரிவான உரையாற்றினார்.

நீட் தேர்வுக்கு பின்னர் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது- முதல்வர் ஸ்டாலின்
நீட் என்பது கல்வி முறை அல்ல- பயிற்சி முறை- தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் எப்படி செலுத்தி படிக்க முடியும்?
தகுதி என்ற பெயரிலான அறிவுத் தீண்டாமையை ஒழிக்கவே நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா- முதல்வர் ஸ்டாலின்
READ MORE




Click it and Unblock the Notifications
