சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது.. திமுகவின் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்படும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது. முதல் நாளிலேயே சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தும் திமுகவின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவார்.

TamilNadu Assembly to convene on January 6

இக்கூட்டத் தொடரில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சார்பாக திமுக எம்.எல்.ஏக்கள், சட்டசபை செயலாளரிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

இதன் மீதான சட்ட விளக்கங்களை சபாநாயகர் தனபால் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவை பின்பற்றியே சி.ஏ.ஏ. எதிர்ப்பு சட்டத்தை தமிழகமும் நிறைவேற்ற வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை.

ஆனால் இக்கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+