என்ன மக்கா.. பகுத்தறிவோடு பதில் சொல்லு அல்லது பதவி விலகு! மனோ தங்கராஜுக்கு பாஜகவின் 6 கேள்விகள்!
சென்னை: ஆவின் பால் விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக, அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆவின் பால் விவகாரம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரை விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார் அமைச்சர் மனோ தங்கராஜ். அதற்கு எதிர்வினையாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டு 48 மணி நேரம் கெடு விதித்தார் அண்ணாமலை. உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார் அண்ணாமலை.

அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், “மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல” என்றார். இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு 6 கேள்விகளை எழுப்பியுள்ளது தமிழக பாஜக. தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மனோ தங்கராஜ் அவர்களே…
“எப்படி இருக்க பா? என்ன மக்கா… சந்தோஷமா இருக்கியா?”
சரி… ஏன் இதுவரை கேட்ட எந்த கேள்விகளுக்கும் உருப்படியான பதில் சொல்லல?
மறுபடியும் கேட்கிறோம்! பகுத்தறிவோடு பதில் சொல், அல்லது பதவி விலகு!
1. முதலில், ஆவின் முறைகேடுகள் குறித்து தலைவர் அண்ணாமலை அவர்கள் கசப்பான கேள்விகளை கேட்டதால், கடுப்பில் அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே? (30 hours more ⏳)
2. 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், வெறும் 4.79% கொழுப்புச் சத்து மட்டுமே இருப்பது, FSSAI அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில்,
தமிழ்நாடு பாஜக சார்பில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. பாக்கி 1.21% எங்கே?
3. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) பரிந்துரைப்படி, நிலைப்படுத்தப்பட்ட பாலில் 4.5% கொழுப்புச்சத்து இருக்க வேண்டியது அவசியம். அதை 3.5% மாக குறைத்தது ஏன்?
4. இந்நிலையில், பாலில் உள்ள கொழுப்பினை 4.5%ல் இருந்து 3.5% க்கு குறைத்த பின்பும், அதன் விலையை குறைக்காதது ஏன்?
5. FSSAI பரிந்துரைப்படி, அளவில் 3% கொழுப்புள்ள பால் மட்டுமே சமன்படுத்தப்பட்ட பாலாக வகைப்படுத்தப்படும். ஆனால், தற்பொழுது 3.5% கொழுப்புள்ள “டிலைட்” பாலை சமன்படுத்தப்பட்ட பால் என்று எவ்வாறு அழைக்க முடியும்?
6. திமுக ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில், பால் கொள்முதல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உதாரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பால் கொள்முதலில் 6 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது ஏன்?
பதில்களுக்கு மக்களோடு அமர்ந்து காத்திருக்கிறோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications