"சரிப்பட்டு வராது".. யார் அந்த 17 பேர்?.. டென்சன் காட்டிய டெல்லி மேலிடம்.. பரபரக்கும் தமிழ்நாடு பாஜக
சென்னை; தமிழ்நாடு பாஜகவில் விரைவில் சில முக்கிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கட்சியை வலுப்படுத்தும் விதமாக முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாஜக 4 இடங்களில் வென்று, சட்டசபைக்கு சென்றது. மொத்தமாக தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, இந்த 4 எம்எல்ஏ வெற்றி என்பது பாஜகவிற்கு ஒரு வகையில் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது டெல்லி மேலிடம் ஒரு விதித்ததில் நம்பிக்கையோடுதான் இருக்கிறதாம். ஆனால் கடந்த சில நாட்களாக நடந்த சில விஷயங்கள் டெல்லி மேலிடத்தை கொஞ்சம் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம்.

கோபம்
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என்பதே பாஜக மேலிடம் கோபம் அடைய காரணம் என்கிறார்கள். முக்கியமாக எச். ராஜாவின் தேர்தல் செலவினங்கள் குறித்து காரைக்குடி பாஜக நிர்வாகிகள் வெளிப்படையாக புகார் அளித்தனர். அதோடு எச். ராஜாவை எதிர்த்து மொத்தமாக ராஜினாமாவும் செய்தனர். இதை டெல்லி பாஜக மேலிடம் விரும்பவில்லை என்கிறார்கள்.

மோதல்
நிர்வாகிகளுக்கு இடையில் மோதல் இருந்தால், அதை பேசி தீர்த்து இருக்கலாம். ஆனால் இப்படி வெளிப்படையாக தேர்தல் செலவு பற்றி மாறி மாறி புகார் வைப்பது சரி இல்லை என்றது பாஜக மேலிடம் கோபப்பட்டு இருக்கிறது, இரண்டு தரப்பு மீதும் பாஜக கொஞ்சம் கடுப்பில்தான் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அதிலும் இவ்வளவு கோடியை செலவு செய்ய கொடுத்தோம் என்றெல்லாம் மாறி மாறி புகார் வைத்ததை தேசிய தலைமை விரும்பவில்லையாம்.

தேசிய தலைமை
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தேர்தல் நேரத்தில் பல மாவட்ட நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக சில தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனிக்காமல் அசட்டையாக இருந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால். இதனால் இதை பற்றியும் விசாரிக்கும் முடிவில் உள்ளனர். ஏற்கனவே கட்சியில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் குறித்த லிஸ்ட் தயாராகிவிட்டது என்கிறார்கள்.

லிஸ்ட்
அதன்படி 17 முக்கியமான நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் சில மூத்த நிர்வாகிகள் மாநில பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லிக்கு அழைக்கப்படலாம் அல்லது பிற மாநிலங்களில் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வருடம் உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் வருவதால், தமிழ்நாடு பாஜகவின் சில சீனியர்கள் அங்கே "மூவ்" செய்யபபடலாம் என்றும் கூறப்படுகிறது.

மாற்றம்
சட்டசபையில் தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் செயல்பட்ட விதம் மேலிடத்தை கவர்ந்து உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் வகையில் எம்எல்ஏக்கள் செயல்படுவதாக மேலிடம் நினைக்கிறது. நிர்வாகிகளுக்கு இடையில் இருக்கும் மோதல் மட்டுமே பிரச்சனையாக இருக்கிறது, அதை மட்டும் சரி செய்ய வேண்டும் என்று டெல்லி தேசிய தலைமை கருதுகிறது.

1 மாதம்
அடுத்த 1 மாதத்திற்குள் இதனால் தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். கர்நாடகாவில் பாஜகவினர் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், அதை கவனித்த உடனே தமிழ்நாடு பாஜக விஷயத்தை கவனிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications