இனி மின்சார பேருந்து.. சென்னை உட்பட 3 மாவட்டத்திற்கு 500 மின்சார பேருந்து.. ஓ.பி.எஸ் அறிவிப்பு!
சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 8வது முறையாக ஓ. பன்னீர் செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் அவர், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இனி ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படும். விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் அளிக்கப்படும்.
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.மாசற்ற மின்சார பஸ்களை போக்குவரத்து துறையில் அறிமுகம் செய்கிறோம்.ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம்.
2000 மின்சார பஸ்கள் வாங்கி பயன்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும்.500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்.
டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட நிதி இழப்பை சரி செய்ய போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதி தரப்பட்டது. போக்குவரத்து துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1297.83 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன் மூலம் காற்று மாசு அளவு வெகுவாக குறையும். வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications