சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பட்ஜெட் 2019: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கல்லூரி.. ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Tamilnadu Budget 2019: A new art and science college will be built in Rameshwaram on behalf of Abdul Kalam

இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதன்படி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏரிகளை பராமரிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். இந்த கல்லூரியில் பல புதிய அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படும்.

அப்துல்கலாம் நினைவாக இந்த கல்லூரி அமைக்கப்படும். இதில் ஏழை மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

English summary
Tamilnadu Budget 2019: A new art and science college will be built in Rameshwaram on behalf of Abdul Kalam name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X