"மண்ணிலே ஈரமுண்டு".. இருளர் இன மக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் சொன்ன பிடிஆர்.. இத்தனை வீடுகளா!
சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் சமூக நீதி தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் நலத்துறை
சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும். இந்த சமத்துவபுரங்கள் சீரமைப்பு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை மாற்றி அமைக்கப்படும். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இருளர்
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். இதன் மூலம் அவர்களுக்கு 443 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இது போக வரும் ஆண்டு நிதியிலும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
Recommended Video

வீடுகள்
அதன்படி வரும் நிதியாண்டில் அவர்களுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித்தரப்படும். அதன்மூலம் 1000 புதிய வீடுகள் இருளர்களுக்கு கட்டித்தரப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் இருளர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அதற்கான பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருளர்கள் சொந்த வீடு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல வருடமாக ஒரே ஊர்களில் இருக்கும் இருளர்களுக்கு கூட சொந்த வீடுகள் இல்லை. இவர்களின் கஷ்டங்களை நிஜ பின்னணியோடு சமீபத்தில் ஜெய் பீம் படம் வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படிப்பட்ட நிலையில்தான் இவர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications