Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

34 மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழ்நாடு மீனவர்கள், 2 கேரளா மீனவர்கள் என்று 34 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தை அளிப்பதாக கூறியுள்ள அவர், இதனை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று இரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், குடியரசு தினமான இன்று அதிகாலை 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

fisherman mk stalin jai shankar

ஒரே இரவில் 34 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, 3 படகுகளும் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 25.01.2025 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள, கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள் என்று மொத்தம் 34 மீனவர்களை தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது கவலை அளிக்கிறது.

இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு, அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது. எனவே நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்

இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+