சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா காலத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை 6-வது முறையாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் கேபி அன்பழகன், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.

மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாயும் முதல்வருடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அத்துடன் அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications