"இனி எவருக்கும் இந்த துயரம் நிகழக் கூடாது".. ஸ்டேன் சாமி மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: சமூக போராளி ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சமூக போராளி ஸ்டேன் சாமி இன்று மானம் அடைந்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். பார்க்கின்ஸன் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும் கூட இவருக்கு பெயில் தரப்படவில்லை.

2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் என்ஐஏ அமைப்பு இவரை விசாரித்து வந்த நிலையில் பெயில் மட்டும் மறுக்கப்பட்டு வந்தது.

கஸ்டடியில் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு மற்றும் இவர் மிகவும் தாமதமாக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பெயில் வழங்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் ஸ்டேன் சாமியின் மறைவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல்.
அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது, என்று உருக்கமாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications