3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கியது.. சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி!
முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
Recommended Video
சென்னை: முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இன்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்று முழுதாக தன்னுடைய ஆட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். ஆட்சி நிர்வாகத்தையும், கட்சியையும் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் அவர் தற்போது வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் முதல்முறையாக முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று தொடங்கும் பயணம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும்.
லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் முதலில் லண்டன் செல்கிறார். அங்கு அவர் மருத்துவ துறை சார்ந்த ஒப்பந்தங்களை செய்ய உள்ளார்.
அங்கு சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து மருத்துவம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளார். அதன்பின் லண்டனிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 2ஆம் தேதி நியூயார்க் செல்கிறார்.
அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார். அவர்களுடன் முக்கிய ஆலோசனைகளை செய்ய உள்ளார். அதேபோல் அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் உரையாட உள்ளார்.
செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் பல்வேறு ஒப்பந்தங்களை செய்ய உள்ளார். அதன்பின் தனது பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10ம் தேதி அவர் தமிழகம் திரும்புவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications