மகாராணியாக 70 ஆண்டுகள்.. முடிவுக்கு வந்த ராணி எலிசபெத் சகாப்தம்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்
பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் மகாராணி எலிசபெத் வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
கடந்த ஆண்டு முதலே அவர் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்து வந்தார். அவர் நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டே வந்தார்.

இரண்டாம் மகாராணி எலிசபெத் மறைந்த நிலையில், பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்கள் நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்த இரண்டாவது எலிசபெத்தின் cமமமுடிவுக்கு வந்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் பொது வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்.
பிரிட்டிஷ் அரசு குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரின் மறைவுக்கு இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications