சென்னைக்கு அடித்த‘ஜாக்பாட்'.. ரூ.1415 கோடி முதலீட்டில் வரும் தொழிற்சாலை.. தட்டித்தூக்கிய தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜப்பானை சேர்ந்த பிரபல ஃபாஸ்டென்னிங் தயாரிப்பு நிறுவனமான 'ஒய்கேகே கார்ப்பரேஷனின்' இந்திய பிரிவான 'ஒய்கேகே இந்தியா' (YKK India) சென்னையை அடுத்த 'ஓரிஜின்ஸ் பை மஹிந்திரா' தொழில் பூங்காவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

ஜப்பானை சேர்ந்த முன்னணி தொழில் குழுமமாக ஒய்கேகே உள்ளது. இது உற்பத்தி சார்ந்த தொழில் குழுமாகும். இங்கு ஜிப்பர், ஃபாஸ்டனிங் தயாரிப்புகள், கட்டடக்கலை சார்ந்த தயாரிப்புகள், பிளாஸ்டிகள் ஹார்ட்வேர் மற்றும் இன்டஸ்டிரியல் மெஷினரி உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் இந்திய கிளை சார்பில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 'ஒய்கேகே இந்தியா' நிறுவனம் சென்னை அருகே ரூ.1,415 கோடி (150 மில்லியன் டாலர்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

சென்னையை அடுத்த 'ஒரிஜின்ஸ் பை மஹிந்திரா' தொழில்பூங்காவில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளதுது. இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் 2028 பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடைய உள்ளது. இங்கு அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுத்தப்பட்டு உற்பத்தித் திறனை வலுவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் அமையும் இந்த தொழிற்சாலையில் இருந்து ஆடை, ஜவுளி மற்றும் பல்வேறு தொழில்துறை பிரிவுகள் இருக்கும். அதேபோல் ஃபாஸ்டென்னிங் தயாரிப்புகள் உள்நாட்டு தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிறுவனம் சார்பில் ஏற்கனவே ஹரியானா மாநிலத்தில் 2 தொழிற்சாலைகள் உள்ளன. புதிய ஆலை சென்னையில் அமையும் பட்சத்தில் இது இந்தியாவின் 3வது தொழிற்சாலையாக இருக்கும். சென்னையில் இந்த தொழிற்சாலை தொடங்கும் பட்சத்தில் அதனை சுற்றிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+