நள்ளிரவில் திடீரென ஏர்போர்ட் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சோனியா காந்திக்கு கொடுத்த கிப்ட்! என்ன பாருங்க
சென்னை: திமுக மகளிர் அணி நடத்தும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்னை வந்த காங்கிரஸின் சோனியா காந்தியை விமான நிலையத்திற்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னையில் சனிக்கிழமை அக். 14ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வெகு நடைபெற உள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை நேற்று வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தனர். இந்த மாநாட்டையொட்டி ஒய்.எம்.சி.ஏ. திடலில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரவேற்பு: இந்த மகளிர் உரிமை மாநாட்டில் தேசிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாகச் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். "இந்தியா" கூட்டணியில் இருந்து மொத்தம் 9 பெண் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இதற்காகச் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பரிசு: இதற்கிடையே இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். மேலும், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு புத்தங்களையும் பரிசாக அளித்தார்.
உதயநிதி: அப்போது கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோரும் நேரில் வரவேற்றனர். மேலும் டிஆர் பாலு எம்பி மற்றும் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் வரவேற்றனர். விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications