தமிழர் நலனில் அக்கறையில்லை.. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறியுள்ள செல்வபெருந்தகை, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, விசிக மற்றும் சிபிஎம் கட்சிகளும் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநராக 2021ஆம் ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். அப்போது முதலே தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்வதை வழக்கமாக வைத்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம், புதிய கல்விக் கொள்கை, திருவள்ளுவர் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளை பேசுவது சர்ச்சையாகி வருகிறது.

congress governor rn ravi selvaperunthagai

இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தினத்தன்று தமிழக அரசியல் கட்சியினருக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கமான விஷயம்.

அந்த வகையில் இம்முறை ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தேநீர் விருந்து அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செல்வபெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.

congress governor rn ravi selvaperunthagai

இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்து புறக்கணிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+