தமிழகத்தில் மளமளவென குறையும் கொரோனா! பாசிட்டிவ் விகிதமும் 6க்கு கீழ் சரிந்தது! பொதுமக்கள் நிம்மதி
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் கட்டுக்குள் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பின்னர் பல மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பு மீண்டும் சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் பொதுமக்களிடையே ஊரடங்கு தொடர்பான அச்சமம் எழுந்தது. இந்தச் சூழலில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி பாதிப்பு
பல நாட்களுக்குப் பின்னர் நேற்று மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000க்கு கீழ் குறைந்து இருந்தது. இந்நிலையில், இன்றும் வைரஸ் பாதிப்பு குறைந்தே உள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 27,975 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்தமானில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை மாநிலத்தில் 35,34,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று தமிழகத்தில் மொத்தம் 15,409 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 15,093ஆக குறைந்து உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் சுமார் 4901 பேரும் செங்கல்பட்டில் 1698 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்புகள் இல்லை
மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 2219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,81,121ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களைப் போலவே நல்வாய்ப்பாக இன்றும் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநிலத்தில் பதிவான கொரோனா உயிரிழப்புகள் 38032ஆகவே உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 500க்கு கீழாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் அங்கு 415 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 202 பேருக்கும் கோவையில் 177 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தவிர விருதுநகரில் 96 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதம் 5.6ஆக குறைந்துள்ள நிலையில், அதிகபட்சமாகத் திருப்பூரில் பாசிட்டிவ் விகிதம் 15.4ஆக உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications